- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு ஊறுகாய் சொல்லுவாங்க. ஊறுகாயில் பல விதங்கள் இருக்கு சைவத்துல எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் எல்லா ஊறுகாயுமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். அசைவத்தை பொறுத்தவரைக்கும் மீன் ஊறுகாய், சிக்கன் ஊறுகாய் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இறால் வாங்கி ஒரு தடவை இறால் ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்.
ஒரு மாசம் வரைக்கும் பிரிட்ஜுக்குள்ள ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடலாம் கெட்டே போகாது. இறால நல்லா வேக வச்சு பொன்னிறமா வறுத்து இதை செய்யும்போது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். நல்லா காரசாரமா புளிப்பா சாப்பிடும் போது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இந்த இறால் ஊறுகாய் அந்த மாதிரி ஒரு சுவையில் தான் இருக்கும். இந்த ரெசிபியை ஒரு தடவை வீட்ல செஞ்சு பாருங்க.
கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க இந்த டேஸ்டான ரெசிபிக்கு சுட சுட சாதம் இருந்தா அதுல போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும். வெளியூர்ல இருக்கீங்க அப்படின்னா வீட்டுக்கு வரும்போது இத செஞ்சு கொண்டு போயிடுங்க ஹாஸ்டல்ல ஃப்ரிட்ஜ் இருந்தா அதுல வச்சு ஒரு மாசத்துக்கு நல்லா சுவையா இந்த இறால் ஊறுகாய் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான இறால் ஊறுகாய் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் இறாலை கழுவி சேர்த்து மஞ்சள் தூள் உப்பு போட்டு தண்ணீர் பிரிந்து வந்து வற்றும் வரை நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
மற்றொரு கடாயில் பட்டை கிராம்பு, ஏலக்காய் மல்லி விதைகள் சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து வேக வைத்த இறாலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுக்கவும்.
அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கியதும் பொறித்து வைத்துள்ள இறாலை சேர்த்து மிளகாய் தூள் அரைத்து வைத்த மசாலா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
அனைத்தும் நன்றாக வெந்த பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்து பாட்டிலில் ஸ்டோர் செய்தால் சுவையான இறால் ஊறுகாய் தயார்.






