Home அசைவம் இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!

இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!

நான் வெஜ்ல ஒரு சிலர் சிக்கன் மட்டன் மட்டும் சாப்பிடுவாங்க ஆனா ஒரு சிலர் இறால் நண்டு கடம்பா அப்படின்னு இந்த மாதிரி  எல்லாமே விரும்பி நல்லா சாப்பிடுவாங்க அந்த வகையில் இறால் வச்சு இறால் 65 கிரேவி இறால் குழம்பு அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா இறால் பொடிமாஸ் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.

-விளம்பரம்-

முட்டை பொடிமாஸ் சுறா புட்டு இதில் நாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இறால் பொடிமாஸ் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம் ஒரு தடவை இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் எல்லாம் காரத்துக்கு சேர்த்து இந்த இறால் பொடிமாஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப  சூப்பரா இருக்கும். இந்த விரால் பொடிமாஸ் செஞ்சு மீன் குழம்புக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

வெறும் சாதத்தில் கூட அப்படியே இந்த பொடி மாசு போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் அதுவும் ரொம்ப டேஸ்டா இருக்கும். இரா சாப்டாத குழந்தைகளுக்கு இந்த பொடிமாஸ் செஞ்சு முட்டை பொடிமாஸ் அப்படின்னு சொல்லி ஏமாத்தி கூட சாப்பிட வைக்கலாம். எந்த மசாலாவும் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்து செய்யக்கூடிய இந்த இறால் பொடிமாஸ் கண்டிப்பா சூப்பர் டேஸ்டில் கிடைக்கும். இந்த வித்தியாசமான இறால் பொடிமாஸ் ரொம்ப வே சிம்பிளா உங்க வீட்டுல செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த இறால் பொடிமாஸ் எப்படி சட்டுனு செய்றதுன்னு பார்க்கலாம்

Print
1 from 1 vote

இறால் பொடிமாஸ் | Prawn Podimas Recipe In Tamil

வெறும் சாதத்தில் கூட அப்படியே இந்த பொடி மாசு போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் அதுவும் ரொம்ப டேஸ்டா இருக்கும். இரா சாப்டாத குழந்தைகளுக்கு இந்த பொடிமாஸ் செஞ்சு முட்டை பொடிமாஸ் அப்படின்னு சொல்லி ஏமாத்தி கூட சாப்பிட வைக்கலாம். எந்த மசாலாவும் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்து செய்யக்கூடிய இந்த இறால் பொடிமாஸ் கண்டிப்பா சூப்பர் டேஸ்டில் கிடைக்கும். இந்த வித்தியாசமான இறால் பொடிமாஸ் ரொம்ப வே சிம்பிளா உங்கவீட்டுல செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த இறால் பொடிமாஸ் எப்படி சட்டுனு செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH, starters
Cuisine: tamil nadu
Keyword: Prawn Podimas
Yield: 4
Calories: 305kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்த மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  • இறால் நன்றாக வெந்தவுடன் அதனை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்த நன்றாக வதக்கவும்
  • பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்
  • பிறகு நறுக்கி வைத்துள்ள இறாலை சேர்த்து மஞ்சள் தூள் தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளறவும்
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான இறால் பொடிமாஸ் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 305kcal | Carbohydrates: 230g | Protein: 33g | Sodium: 223mg | Potassium: 83.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷலாக கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!