இந்த வாரம் ஸ்பெஷலாக கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து கிரேவி, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி குழம்பு வையுங்கள். இந்த இறால் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த இறால் குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பானது இறால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடும் வகையில் இருக்கும். இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு சூப்பரான அசைவ உணவாகும். இதனை கிராமத்து மனம்‌ மறாமல் எப்படி செய்வதென்று இந்த பதிவில்‌ பார்க்கலாம்.

- Advertisement -
Print
1 from 1 vote

கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு | Prawn Curry Recipe In Tamil

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து கிரேவி, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Village Style Prawn Curry
Yield: 3 People
Calories: 84kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மண் சட்டி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி இறால்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • புளி எலுமிச்சை அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 100 கி கத்தரிக்காய்

அரைக்க :

  • 10 சின்ன வெங்காயம்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/2 துண்டு பட்டை
  • 1/2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கத்தரிக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் புளியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி, இஞ்சி பூண்டு விழுது, நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் இறாலை சேர்த்து மேலும் வேக விடவும்.
  • ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 84kcal | Carbohydrates: 3.1g | Protein: 20.4g | Fat: 2g | Sodium: 59mg | Potassium: 115mg | Fiber: 6.4g | Vitamin A: 23IU | Vitamin C: 169mg | Calcium: 28mg | Iron: 10mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த சிம்பிளாக எண்ணெய் இறால் ப்ரை இப்படி செஞ்சு பாருங்க!