அடுத்தமுறை இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த சிம்பிளாக எண்ணெய் இறால் ப்ரை இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

கடல் உணவுகள்ல இருக்கக்கூடிய இந்த இறால் ஒரு சில பேருக்கு ரொம்பவே ஃபேவரட்டா இருக்கும். இந்த இறால நம்ம பலவிதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் இறால் தொக்கு 65 சில்லி இறால் குழம்பு அப்படின்னு நிறைய உணவுகள் சென்று சாப்பிட்டு இருப்போம் ஆனால் ரொம்பவே சிம்பிளா சட்டுனு நமக்கு வேலை முடியுற மாதிரி அதே சமயத்தில் ரொம்ப டேஸ்ட்டா இருக்க மாதிரியான ஒரு சிம்பிள் எண்ணெய் இறால் தான் இப்ப பாக்க போறோம். 15 நிமிஷத்துல நம்ம இந்த இறால செஞ்சு முடிச்சிடலாம் டேஸ்டும் அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

அதே நேரத்தில் இதுக்கு தேவையான பொருட்களும் ரொம்பவே கம்மிதான் இந்த எண்ணெய் இறால அப்படியே நம்ம சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் இல்லனா நம்ம எந்த சட்டியில இந்த இறால செய்றமோ அந்த சட்டியில நிறைய சாதம் போட்டு பிசைஞ்சு கடாய் சோறு மாதிரி கொடுத்தா குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க ஏன்னா அந்த எண்ணெயில் இறாலோட வாசனையும் டேஸ்ட்டும் இறங்கி சாப்பிடுவது ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும்.

- Advertisement -

ஒரு சில பேருக்கு எல்லாம் நிறைய மசாலா போட்டு சாப்பிடுவது பிடிக்காது அவங்க எல்லாரும் இந்த மாதிரி ரொம்பவே கம்மியான மசாலா வச்சு ரொம்ப ஈஸியா இந்த எண்ணெய் இறால் செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா பக்காவான வாசனையோட இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சிம்பிள் எண்ணெய் இறால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
1 from 1 vote

எண்ணெய் இறால் | Simple Ennai Iral Recipe In Tamil

இறால் நம்ம பலவிதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் இறால் தொக்கு 65 சில்லி இறால் குழம்பு அப்படின்னு நிறைய உணவுகள் சென்று சாப்பிட்டு இருப்போம் ஆனால் ரொம்பவே சிம்பிளா சட்டுனு நமக்கு வேலை முடியுற மாதிரி அதே சமயத்தில் ரொம்ப டேஸ்ட்டா இருக்க மாதிரியான ஒரு சிம்பிள் எண்ணெய் இறால் தான் இப்ப பாக்க போறோம். 15 நிமிஷத்துல நம்ம இந்த இறால செஞ்சு முடிச்சிடலாம் டேஸ்டும் அட்டகாசமா இருக்கும். ஒரு சில பேருக்கு எல்லாம் நிறைய மசாலா போட்டு சாப்பிடுவது பிடிக்காது அவங்க எல்லாரும் இந்த மாதிரி ரொம்பவே கம்மியான மசாலா வச்சு ரொம்ப ஈஸியா இந்த எண்ணெய் இறால் செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா பக்காவான வாசனையோட இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ennai Iral
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 5 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 8 பல் பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் எடுத்து வைத்துள்ள பூண்டை தோளோடு இடித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்
  • பிறகு எடுத்து வைத்துள்ள பூண்டு கருவேப்பிலை சேர்த்து அனைத்தும் நன்றாக வதக்கவும் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் இறாலை எண்ணெயிலேயே வேக வைத்து எடுத்தால் சுவையான எண்ணெய் இறால் தயார்

Nutrition

Serving: 400g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g

இதையும் படியுங்கள் : ருசியான பட்டர் இறால் முட்டை மசாலா ஒரு தரம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!