Home சைவம் ருசியான பட்டர் இறால் முட்டை மசாலா ஒரு தரம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ருசியான பட்டர் இறால் முட்டை மசாலா ஒரு தரம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

எனது நான் வெஜ் நிறைய இருந்தாலும் இப்போ கொஞ்ச நாளாவே எல்லாருக்கும் பிரான்ஸ் அப்படின்னு சொல்லப்படுற இறால் ரொம்பவே பிடிக்குது. இந்த இறால் வச்சு நம்ம எக்கச்சக்கமான உணவுகளை செய்ய முடியும். இறால் 65 ,இறால் குழம்பு, இறால் மசாலா, இறால் சில்லி, இறால் பெப்பர் ப்ரை, அப்படின்னு நம்ம நிறைய உணவுகளை இறால் வச்சு செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கொஞ்சம் டிஃபரண்டா பட்டர் இறால் முட்டை மசாலா செஞ்சு சாப்பிட போறோம்.

-விளம்பரம்-

இதுல நம்ம பட்டர் சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே ரிச்சாவும் ஹோட்டலில் கிடைக்கிற மாதிரியும் சூப்பரான டேஸ்டான நமக்கு இருக்கும். எல்லாருமே கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க என் குழந்தைங்க கூட சாப்பிடுவாங்க. இறாலை பிடிக்காது அப்படின்னு சொல்றவங்க கூட இந்த பட்டர் இறால் முட்டை மசாலாவை விரும்பி சாப்பிடுவதை நீங்கள் பார்க்கலாம். இந்த மசாலாவை நம்ம சாதம் இட்லி தோசை சப்பாத்தின்னு எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம்.

எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா அருமையான சுவையில் இருக்கும். ஒருவேளை உங்ககிட்ட ரொம்பவே கம்மியான இறால் தான் இருக்கு அப்படின்னா நீங்க அந்த சமயத்துல இறால் கூட முட்டை சேர்த்து இந்த முட்டை மசாலாவை செஞ்சு சாப்பிட்டு பாக்கலாம். உங்களுக்கு நிறையவும் கிடைக்கும் அதே சமயத்தில் டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க டிஃபரண்டான இந்த பட்டர் இறால் முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

பட்டர் இறால் முட்டை மசாலா | Butter Prawn Egg Masala

இந்த இறால் வச்சு நம்ம எக்கச்சக்கமான உணவுகளை செய்ய முடியும். இறால் 65 , இறால் குழம்பு, இறால் மசாலா, இறால் சில்லி, இறால் பெப்பர் ப்ரை, அப்படின்னு நம்ம நிறைய உணவுகளை இறால் வச்சு செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கொஞ்சம் டிஃபரண்டா பட்டர் இறால் முட்டை மசாலா செஞ்சு சாப்பிட போறோம். எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா அருமையான சுவையில் இருக்கும். ஒருவேளை உங்ககிட்ட ரொம்பவே கம்மியான இறால் தான் இருக்கு அப்படின்னா நீங்க அந்த சமயத்துல இறால் கூட முட்டை சேர்த்து இந்த முட்டை மசாலாவை செஞ்சு சாப்பிட்டு பாக்கலாம். உங்களுக்கு நிறையவும் கிடைக்கும் அதே சமயத்தில் டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Butter prawn Egg Masala
Yield: 4
Calories: 300kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ இறால்
  • 1 கப் பட்டர்
  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். இறாலை மஞ்சள் தூள் போட்டு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய்  சேர்த்துசோம்பு கருவேப்பிலை பட்டை கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு மஞ்சள் தோல் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • ஒரு கொதி வந்தவுடன் இறாலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.பிறகு எடுத்து வைத்துள்ள பட்டர் மற்றும் முட்டையில் கோடு போட்டு அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இப்பொழுது ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான பட்டர் இறால் முட்டை மசாலா தயார்.
     

Nutrition

Serving: 300g | Calories: 300kcal | Carbohydrates: 245g | Protein: 21g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊற தலப்பாகட்டி இறால் பிரியாணி இது போன்று வீட்டிலயே செஞ்சி பாருங்க!