- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, tamil nadu
- Course
- LUNCH
பிரியாணி யாருக்குத் தான் பிடிக்காது. பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில் இருந்தாலும் சீரகச் சம்பா அரிசியில் செய்யப்படும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணிக்கு நிகராகாது. திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இங்கு அறிந்து கொள்வோம். நீங்கள் பிரியாணி பிரியரா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை விரும்பி சாப்பிடுபவரா? உங்களுக்கு இந்த பிரியாணியை வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் உங்களுக்காக இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி இறால் பிரியாணியை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரியாணி ஒவ்வொரு உணவு பிரியர்களுக்கும் ஒரு உணர்வு. அதே சமயம் கடல் உணவு பிரியர்களாக இருந்தால் இந்த தலப்பாகட்டி இறால் பிரியாணியை கண்டிப்பாக செய்து பாருங்கள். இந்த பிரியாணி செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்து சுவைக்கலாம். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணியின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான பிரியாணியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் 65 இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!
Ingredients
Method
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் மிக்ஸி ஜாரில் முந்திரி, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசி பூ, கல்பாசி பூ சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்த விழுது மற்றும் மசாலா சேர்த்து வதக்கவும்.
பின் எண்ணெய் பிரிந்து வந்ததும் அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பின் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து, தயிர் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின் சுத்தம் செய்த இறால் மற்றும் அரிசி சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து மூன்று விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு நெய் விட்டு கிளறி விடவும். அவ்வளவுதான் சுவையான தலப்பாகட்டி இறால் பிரியாணி தயார்.






