இறால் 65 இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!

- Advertisement -

கடல் உணவுகளில்  இறால் அப்படிங்கறது ரொம்பவே ஒரு முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த இறால் உணவுகள் ரொம்பவே சுவையான உணவுகளாக இருக்கும். பலருக்கு இந்த இறால்களை குழம்பாகவும் தொக்காகவும் சாப்பிடுவதை விட வறுவலாக சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி இன்னைக்கு நம்ம   இறால் 65 எப்படி செய்வது பார்க்க இருக்கிறோம். இந்த   இறால் 65 ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும்.

-விளம்பரம்-

இறால்கள் நல்ல கொழுப்பு அமிலங்களும்  அதிகமாக் கொண்டவை அதனால உடலுக்கு ரொம்பவே அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. முடிஞ்ச அளவுக்கு இந்த இறால் உணவுகளை உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இந்த இறால்களில் எந்த ஒரு கெட்ட அமிலங்களும் இல்லாததுனால இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்குமே நல்லாவே எல்லாரும் சாப்பிடலாம். இந்த இறால் உணவுகளை உணவுல மிஸ் பண்ணாம கட்டாயமா சேர்த்துக்கோங்க இது உங்களுக்கு ரொம்பவே நல்ல ஊட்டச்சத்தை கொடுக்குது. இறால் வறுவல் செய்து சாப்பிட போறோம். கடல் உணவுகள்ல அதிக அளவு நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கிறதுனால அவை உடலுக்கு ரொம்பவே நன்மையை மட்டுமே கொடுக்கக்கூடியவைகளாக இருக்கும்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் அந்த இறால்ல இருந்து நம்ம அதோட ஓடையும் உள்ள இருக்கிற ஒரு சின்ன குடலை மட்டும் சுத்தம் பண்ணிட்டோம்னா இறால் ரொம்பவே சாப்பிடறதுக்கு  ஒரு நல்ல உணவு பொருள். சுத்தம் பண்ணிட்டு எடுத்துக்கும்போது மட்டும் கொஞ்சம் பார்த்து சுத்தம் பண்ணி எடுத்துக்கணும். சரி இப்படி சுவையான நிறைய சத்துக்கள் உடைய இந்த இறால்ல  சூப்பரான இறால் 65 எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Print
No ratings yet

இறால் 65 | Prawn 65 recipe in tamil

இறால்களை குழம்பாகவும் தொக்காகவும் சாப்பிடுவதை விட வறுவலாக சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி இன்னைக்கு நம்ம   இறால் 65 எப்படி செய்வது பார்க்க இருக்கிறோம். இந்த   இறால் 65 ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும். இறால்கள் நல்ல கொழுப்பு அமிலங்களும்  அதிகமாக் கொண்டவை அதனால உடலுக்கு ரொம்பவே அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. முடிஞ்ச அளவுக்கு இந்த இறால் உணவுகளை உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இந்த இறால்களில் எந்த ஒரு கெட்ட அமிலங்களும் இல்லாததுனால இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்குமே நல்லாவே எல்லாரும் சாப்பிடலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Achovies Avial, adai dosai, Butter prawn Egg Masala, Capsicum Prawn Fry, cauliflower 65, Chinese Prawn Fry
Yield: 8 People
Calories: 270kcal
Cost: 250

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் தனியா தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் சோள மாவு
  • 1 முட்டை
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சிறிதளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் இறாவை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம் மசாலா மிளகு தூள் என அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு முட்டையை நன்றாக அடித்து இறாலில் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அதில் அரிசி மாவு மற்றும் சோளமாவை சேர்த்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அந்த இறாலை அரை மணி நேரம் வரையில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
  • இறால் நன்றாக ஊறிய பிறகு ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெயை ஊற்றி அதில் ஒவ்வொரு இறாலாக போட்டு இறால் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை அனைத்தையும் தாளித்து அந்த பொறித்த இறால்களை சேர்த்தால் வாசமாக இருக்கும்..
  • இப்பொழுது ஒரு அருமையான மொறுமொறுப்பான காரசாரமான இறால் 65 தயார் இதனை நாம் சாம்பார் மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு என எல்லாவற்றுடனும் வைத்து சாப்பிடலாம்

Nutrition

Calories: 270kcal | Carbohydrates: 14g | Protein: 15g | Fat: 20g