வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய பூஜை

ஒவ்வொருத்தரும் அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாத நிலை வேண்டும் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்போம் ஆனால் அனைவருக்கும் ஏதாவது ஒரு வழியில் ஏதாவது ஒரு பிரச்சனைகளும், கஷ்டங்களும் வந்து கொண்டே இருக்கும். அவரவர்களுடைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு

By Ramya · 19/8/2024

ஒவ்வொருத்தரும் அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாத நிலை வேண்டும் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்போம் ஆனால் அனைவருக்கும் ஏதாவது ஒரு வழியில் ஏதாவது ஒரு பிரச்சனைகளும், கஷ்டங்களும் வந்து கொண்டே இருக்கும். அவரவர்களுடைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான தீர்வு என்ன என்பதை பற்றியும் யோசித்துக் கொண்டே இருப்போம் அந்த குறிப்பிட்ட பிரச்சினைகளை சமாளித்து வெளியே வருவதற்கு தெய்வத்துடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் அப்படி தெய்வத்துடைய அருள் கிடைத்து அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் வெளியே வருவதற்கு செய்யக்கூடிய ஒரு பூஜையைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி தேவியாரின் அருள்

ஒவ்வொருவருக்கும் உடல் ரீதியான பிரச்சினைகள் வேலை தொடர்பான பிரச்சனைகள் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் மனரீதியான பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் இருக்கும். இந்த அனைத்துவித பிரச்சினைகளையும் நீக்க கூடிய ஒரு அற்புதமான பூஜை உள்ளது இந்த பூஜையை நாம் பிரம்ம முகூர்த்த வேலையில் தான் செய்ய வேண்டும் காலை 5 மணியில் இருந்து ஆறு மணிக்குள் இந்த பூஜையை நாம் செய்து முடித்து விட வேண்டும். இந்த பூஜையில் நாம் மகாலட்சுமி தேவியை தான் வணங்க வேண்டும் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி அதற்கு தேவையான அனைத்து விதமான ஆற்றல்களை தரும் வல்லமை படைத்தவள் மகாலட்சுமி தாயார் தான்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய பூஜை

இந்த பூஜையை செய்வதற்கு நாம் சுப முகூர்த்த நாளாக பார்த்து செய்ய வேண்டும் சுபமுகூர்த்த நாளன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து மகாலட்சுமி தேவியாருக்கு பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். நாம் ஏற்ற வேண்டிய தீபம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் எந்த விளக்கில் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்.

நெய்வேதியம்

தீபம் ஏற்றிய பிறகு மகாலட்சுமி தேவியாருக்கு ஏதாவது ஒரு இனிப்பு செய்து அதை நெய்வீதியமாக வைத்து வழிபட வேண்டும் மனதை ஒரு மனதோடு வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் கண்களை மூடிக்கொண்டு மகாலட்சுமி தேவியாரிடம் முறையிட வேண்டும். தியான நிலையில் மகாலட்சுமியை முழுமனதாக 10 நிமிடங்கள் ஆவது வழி பட வேண்டும். இறுதியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளலாம்

நெய் தீபம்

அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பிரதான தெய்வத்திற்கு நீதிபத்தி ஏற்றி வைக்க வேண்டும் தொடர்ச்சியாக 41 நாட்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி தாயாரை நினைத்து தீபம் ஏற்றி தியான நிலையில் மனதார வேண்டிக்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து மகிழ்ச்சியான சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய யாராவது ஒருவர் இந்த எளிமையான பூஜையை முழு மனதோடு செய்து வந்தால் குடும்பத்திற்கே நல்ல வாழ்க்கை அமையும்.

Recipes AMP · Quick view
View full