புதன் பெயர்ச்சியின் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் செல்வ செழிப்பை பெறப்போகும் சில ராசிகள்
சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் அக்டோபர் 29ஆம் தேதி சுக்கிர பகவான் புதன் பகவானும் இணைய போவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப் போகிறது. அக்டோபர் 29ஆம் தேதி மாலை ஜனவரி நான்காம் தேதி வரையில் மொத்தமாக 66 நாட்கள் இரண்டு பேரும் ஒரே ராசியில் பயணம் செய்ய
சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் அக்டோபர் 29ஆம் தேதி சுக்கிர பகவான் புதன் பகவானும் இணைய போவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப் போகிறது. அக்டோபர் 29ஆம் தேதி மாலை ஜனவரி நான்காம் தேதி வரையில் மொத்தமாக 66 நாட்கள் இரண்டு பேரும் ஒரே ராசியில் பயணம் செய்யப் போகிறார்கள். மேலும் விருச்சிக ராசியிலேயே நவம்பர் 26 ம் தேதி முதல் வக்ரப்பெயர்ச்சியும் அடையப்போகிறார். மேலும் புதாதித்ய யோகமும் சூரியனுடன் சேர்ந்து உருவாகப் போகிறது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
மிதுன ராசி
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான். எனவே இந்த பெயர்ச்சி காரணமாக பணவரவு அதிகரிக்கும் மேலும் செலவு அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு இந்த காலம் ராஜயோகம் அதிகமாக கிடைக்கும். செலவை கொஞ்சம் சமாளித்து இருப்பது நல்லது மேலும் வியாபாரம் தொடர்பாக லாபம் நல்ல பெயர் என அனைத்துமே கிடைக்கும் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்களும் கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு புதன் பயிற்சியின் விளைவால் வேலை பார்க்கும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும் புதிதாக வாகனம் வீடு மனை போன்றவே வாங்கும் யோகம் அமையும் உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி வீட்டில் நிரம்பும். வியாபாரம் தொடர்பாக வெற்றி கிடைக்கும் மேலும் உங்களுடைய சேமிப்பு தொகையும் அதிகரிக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்கு இந்த லட்சுமி நாராயண ராஜயோகத்தால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களும் நல்ல காரியங்களும் நடக்கும். கடின உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ற மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவன் வீட்டின் மூலம் சில உதவிகளும் கிடைக்கும். சூதாட்டம் போன்ற செயல்களில் இருந்து விலகி இருப்பது உங்களுக்கு நல்லது தொழில் தொடர்பாக முன்னேற்றங்கள் கிடைக்கும் எனவே மற்றவர்களிடம் பேசும் போது கொஞ்சம் பார்த்து யோசித்துப் பேச வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கும்ப ராசி
இந்த லட்சுமி நாராயண ராஜயோகத்தால் கும்ப ராசிக்கு குடும்ப உறவில் புரிதலும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கை தரம் மேம்பட்டு குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவு கிடைக்கும் வருமானம் கிடைக்கும். தந்தையுடைய ஆதரவு கிடைத்து அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சில நல்லவைகளும் நடக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பதிவு உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.