பெயர்ச்சியாகும் புதன்! இனி இந்த 5 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்!

சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறது. புதனின் மாற்றத்தால் ஏராளமான ராசிகள் நன்மையே பெறுவார்கள். ஏனென்றால் புதன் நன்மையே செய்வார் எனவும் சொல்லப்படுகிறது. கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனத

By ·

சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறது. புதனின் மாற்றத்தால் ஏராளமான ராசிகள் நன்மையே பெறுவார்கள். ஏனென்றால் புதன் நன்மையே செய்வார் எனவும் சொல்லப்படுகிறது. கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசிக்கு செல்கிறார். கன்னி புதனின் சொந்த ராசியாகவும், உச்ச ராசியாகவும் இருப்பதால், புதன் கன்னியில் இருக்கும் போது பொதுவாக மிகவும் சாதகமான பலன்களையே கொடுப்பார் என்றாலும், எந்த ஐந்து ராசிகளுக்கு அருமையான பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்கு புதனின் சஞ்சாரத்தால் கல்யாண கனவுகள் கைகூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் பெருகும். சம்பாதித்த பணத்தை சரியான வகையில் சேமிப்பிலும் வெற்றி பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் இதயத்தை வெல்வதில் நீங்கள் வெற்றி பெறலாம். கூட்டு சேர்ந்து செய்யும் தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். சகோதா்களின் உதவி கிடைக்கும்.

மகரம்

பண வரத்தால் மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.‌ தொழிலும் வியாபாரத்திலும் அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வேலைகள் முடிவடையும். வேலை தேடுபவர்கள் வெற்றி பெறலாம். இதன் மூலம் உங்கள் வேலையில் திருப்தி அடையலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை கன்னி புதன் முடித்துக் கொடுப்பார். புதனின் சுப செல்வாக்கால் உங்களின் தொழிலில் புதிய உயரங்களை அடைய முடியும். வியாபாரம், தொழிலில் புதிய ஆர்டர்கள் குவியலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் தந்தையின் உடல்நிலை பிரச்சனை காரணமாக செலவுகள் கூடும்.சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும்.

கன்னி

புதன் தன்னுடைய உச்ச வீடான கன்னிக்கு வருவதால் கன்னி ராசியினருக்கு உச்சபட்ச மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாவும் மாறும். திருமண வாழ்க்கையில் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் சாதனை பெருமை பட வைக்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு இருந்துவந்த கல்வி தொடர்பான கவலைகள் அனைத்தையும் கன்னி புதன் தீர்த்ஹ்டு வைப்பார். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் வரும். இதன் மூலம் உங்கள் வருமானம் முன்பை விட அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் புதன், சுப செலவுகளை ஏற்படுத்தி, நல்ல காலத்தையும் கூடவே ஏற்படுத்திக் கொடுப்பார்.‌ இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தம் அல்லது முதலீட்டை பெறுவீர்கள். இது உங்கள் வணிக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

இதனையும் படியுங்கள் : நடக்கவிருக்கும் ராகுவின் நட்சத்திர மாற்றம் இனி இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தான்!

Recipes AMP · Quick view
View full