சுவையான மற்றும் ஆரோக்கியமான பரங்கிக்காய் தோசை இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை கூடுதலாகவே வாங்கி சாப்பிடுவார்கள்!!

காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தோசை சுடலாம் என்று நினைத்தால் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் பரங்கிக்காய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம். இதுவரை பரங்கிக்காய் கொண்டு கூட்டு, சம்பார் தான் செய்திருப

By ·

காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தோசை சுடலாம் என்று நினைத்தால் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் பரங்கிக்காய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம். இதுவரை பரங்கிக்காய் கொண்டு கூட்டு, சம்பார் தான் செய்திருப்பீர்கள். அடுத்த முறை பரங்கிக்காய் வெச்சு சமைப்பதாக இருந்தால், பரங்கிக்காய் தோசை செய்யுங்கள். அரசாணிக்காய், மஞ்சள் பூசணிக்காய், பரங்கிக்காய் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூசணிக்காயில் நிறையவே சத்துக்கள் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கும். பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.

புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். அன்றாட தோசையில், ஒரு பகுதி உளுத்தம் பருப்புடன் மூன்று பங்கு அரிசியை சாப்பிடப் பழகிவிட்டோம். இது குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது என்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக நாம் செய்ய வேண்டியது, சத்தான உணவைத் தேடுவது தான். அதாவது சாதாரண தோசைக்கு பதிலாக பரங்கிக்காய் மற்றும் பாசி பருப்பு தோசையை தயாரித்து சாப்பிடலாம். பரங்கிக்காய் உடல் சூட்டை குறைக்கும். பரங்கிக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்களை அதிகம் உள்ளது. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகள் குணமாகும். இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ள பரங்கிக்காயில் சுவைமிகுந்த காலை உணவான பரங்கிக்காய் தோசை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான பூண்டு மசாலா தோசை ஒரு‌ முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இரண்டு தோசைகள் அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை