மொறு மொறுனு ருசியான பஞ்சாபி சமோசா இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி!
சமோசா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. சமோசாக்களில் பல வகை உண்டு. அதில் வெஜிடபிள் சமோசா, சிக்கன் சமோசா, ஆனியன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, காலிஃப்ளவர் சமோசா, ஃபிஷ் சமோசா, மற்றும் முட்டை சமோசா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப
சமோசா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. சமோசாக்களில் பல வகை உண்டு. அதில் வெஜிடபிள் சமோசா, சிக்கன் சமோசா, ஆனியன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, காலிஃப்ளவர் சமோசா, ஃபிஷ் சமோசா, மற்றும் முட்டை சமோசா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது உருளைக்கிழங்கு சமோசா. இது பஞ்சாபி சமோசா என்றும் அழைக்கப்படுகிறது. இது வெங்காய சமோசா போல் அல்லாமல் மிருதுவாக இருக்கும்.
சமோசாவில் நமக்கு பிடித்தவற்றை உள்ளே வைத்து சுவையான விதவிதமான சமோசா செய்யலாம், காய்கறிகளை வைத்து செய்தால் காய்கறி சமோசா. வெங்காயம் வைத்து செய்யும் வெங்காய சமோசா. உருளைக்கிழங்கு கொண்டு உருளைக்கிழங்கு சமோசா செய்யலாம். பன்னீர் மசாலா தூவி வேக வைத்து பனீர் சமோசா செய்யலாம். மாலை நேரங்களில் சுட சுட சமோசாவை புதினா சட்னியில் தொட்டு உண்ணும் சுவையே தனி தான்.
பொதுவாகவே சமோசா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டி. மாலை நேரங்களில் chat கடைகளில் மற்றும் சுட சுட சமோசாவை செய்து விற்க்கும் கடைகளில் அலைமோதும் கூட்டமே அதற்கு சாட்சி. அனைவருக்கும் பிடித்தமான இந்த சமோசாவை நம் வீட்டிலேயும் செய்து சுவைக்கலாம்.