ருசியான பஞ்சாபி வெண்டைக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான ரெசிபி!

வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்பட

By Prem Kumar · 16/11/2023

வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். வெண்டைக்காயின் நன்மைகளின் சில தான். இன்னும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரே மாதிரியான வெண்டைக்காய் பொரியல், சாம்பார் என்ற உணவை சாப்பிட்டு அலுத்துக் விடுகிறோம்.

நம் வாழ்வில் எப்படி மசாலா தேவைப்படுகிறதோ, அதே போல சுவையிலும் மசாலா தேவை. நீங்கள் அனைவரும் வெண்டைக்காய் வறுவல் சாப்பிட்டிருப்பீர்கள். இந்த பஞ்சாபி வெண்டைக்காய் மசாலா ஒருமுறை செய்து பாருங்கள். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் வெண்டைக்காய் வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்க.

வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. அப்புறம் இந்த வெண்டைக்காய் மாசாலாவும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். வெண்டைக்காயை கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு மசாலா செய்யலாம் என்று பார்ப்போம். இந்த வெண்டைக்காய் மசாலா செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

Recipes AMP · Quick view
View full