பணம் சேர பர்ஸ் டிப்ஸ்!!

எல்லோரிடமும் பணம் இருந்தாலும் அது தேவையான அளவிற்கு அனைவரிடமும் இருப்பது கிடையாது. மகாலட்சுமி தேவியின் அருள் பெற்றவர்கள் மட்டுமே அதை தேவைக்கு அதிகமாகவே வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். இந்த பணம் உங்களிடம் சேராமல் போவதற்கு பணத்துடன் ஒரு சில பொருட்களை வைத்திருக்க வேண்டும். பர்சில் ப

By Prem Kumar · 8/7/2025

எல்லோரிடமும் பணம் இருந்தாலும் அது தேவையான அளவிற்கு அனைவரிடமும் இருப்பது கிடையாது. மகாலட்சுமி தேவியின் அருள் பெற்றவர்கள் மட்டுமே அதை தேவைக்கு அதிகமாகவே வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். இந்த பணம் உங்களிடம் சேராமல் போவதற்கு பணத்துடன் ஒரு சில பொருட்களை வைத்திருக்க வேண்டும். பர்சில் பணத்துடன் வைக்க வேண்டிய சில பொருட்களை பற்றியும் வைக்கக்கூடாத சில பொருட்களை பற்றியும் இந்த ஆன்மீகம் குறித்த தகவல் பார்க்கலாம்.

பணத்தை வைக்க வேண்டிய இடம்

பணத்தை எப்பொழுதும் மணி பர்ஸ் அல்லது துணிப்பையில் போட்டு கையோடு வைத்திருக்க வேண்டும். பணம் வைத்திருக்கும் பையில் தேவையில்லாத மங்கிப்போன காகிதங்களை வைக்கக்கூடாது. பழைய காகிதங்களை அப்படியே வைத்திருந்தால் அது எதிர்மறையான சில விளைவுகளை ஏற்படுத்தும் இதனால் பணம் சேராமல் போகும். பணத்தை கண்ட கண்ட இடங்களில் அப்படியே போட்டு வைக்கக்கூடாது சமையலறையில் உள்ள மசாலா பொருட்கள் வைத்திருக்கும் டப்பாக்களில் கூட பணத்தை வைக்கலாம்.

பணத்துடன் வைக்கக்கூடாத பொருட்கள்

பழைய கடிதங்கள் ரசீதுகள் மருந்து சீட்டுகள் போன்ற எந்த பொருட்களையும் பணத்துடன் வைக்கக்கூடாது. ஊக்கு கீ செயின், சாவி போன்ற இரும்பு சார்ந்த பொருட்களை பர்ஸில் வைக்க கூடாது. உடைந்த கண்ணாடி துண்டுகள் அல்லது உடைந்த ஏதாவது ஒரு பொருளை பணத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது. அது எதிர்மறையான அதிர்வலைகளை உண்டாக்கும். மேலும் பணத்தை கண்ணாடி பெட்டியில் வைக்க கூடாது கண்ணாடி பெட்டியில் விரிசல் ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக வைக்கவே கூடாது

பணத்துடன் சேர்த்து வைக்க வேண்டிய சில பொருட்கள்

பணத்தை ஈர்க்கக்கூடிய ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் போன்றவற்றை பணத்துடன் எப்பொழுதுமே வைக்க வேண்டும். மேலும் மஞ்சள் கிழங்கை பணத்துடன் வைப்பது நல்லது. கோவிலில் கொடுக்கக்கூடிய குங்குமம் விபூதி எலுமிச்சை பழம் வில்வ இலை துளசி இலை, வேப்பிலை போன்ற தெய்வீக சக்தி பொருந்திய பொருட்களை பணத்துடன் வைத்திருக்க வேண்டும் பணம் இரட்டிப்பாக பெருகும். இவை காய்ந்து போனாலும் அவற்றுக்கு தனி மதிப்பு உண்டு. பணம் வைக்கக் கூடிய பர்ஸில் செந்தூரம் சந்தனம் போன்ற பொருட்களை வைக்க வேண்டும். வெள்ளி கீ செயின் வெள்ளி நாணயம் போன்றவற்றை வைக்க வேண்டும்.

பணம் சேர செய்ய வேண்டியவை

நாம் சம்பாதித்த பணத்திலிருந்து தினமும் ஒரு ரூபாய் யாவது மற்றவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். உதாரணமாக கஷ்டப்படுகின்ற குழந்தைகளுக்கு பிஸ்கட் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு ஏதாவது தானமாக கொடுக்கலாம். நாய்களுக்கு பிஸ்கட் அல்லது ஏதாவது ஒரு உணவு பொருளை தினமும் கொடுப்பது நல்லது. பர்ஸில் எப்பொழுதுமே பணம் அதிகமாக சேர சுயநலமாக பணத்தை செலவு செய்யக்கூடாது மற்றவர்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும்.

இதனையும் படியுங்கள் : செலவான பணம் மீண்டும் வர பரிகாரம்

Recipes AMP · Quick view
View full