2025ல் பெயர்ச்சியாகும் ராகு கேதுவால் இனி இந்த ராசிகளுக்கு நல்ல எதிர்காலம் தான்!!

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த

By ·

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கென தனி சொந்த ராசிகள் கிடையாது. நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், சர்ப்ப கிரகங்களான ராகு – கேது மே மாதம் 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு பெயர்ச்சியாக உள்ளனர். ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் மாற உள்ளதால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளை என தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியினால் வேலையில் வருமானம் கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் புரிபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால், எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். உங்கள் தைரியமும் மன உறுதியும் அதிகரிக்கும். உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். இத்துடன் பணியிடத்திலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் மரியாதை கிடைக்கும். நற்பலன்களை அனுபவிக்கும் நேரமாக இருக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். நோய்களிலிருந்து விடுதலை அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும்.

கடகம்

கடக ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால், தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி பெறும். வேலையில், தொழிலில், புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இது முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் என உயர்வைத் தரும் சாதகமான காலமாக இருக்கும். உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்வீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி ஏற்படும். முதலீடு மூலமாக லாபம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பழைய கடன்களில் இருந்து விடுபடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் காலக்கட்டத்தில் வாட்டி வந்த நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரம் தொழிலில் ஏற்றத்தைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பூரணமாக குணமடைவீர்கள்.

துலாம்

துலாம் ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால், ஆரோக்கியம் மேம்படும். உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும். மொத்தத்தில், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். இது அதிர்ஷ்டம் தரும் காலமாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள்.

இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை