Advertisement
சைவம்

எப்பவும் ஒரே மாதிரி பூரி செய்யாமல் ஒரு தடவை இந்த ராஜஸ்தானி ஸ்டைல் ரவா பூரி இப்படீ செஞ்சு பாருங்க!

Advertisement

பூரி அப்படின்னாலே சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். நல்ல புசுபுசுன்னு வர்ற பூரிய கை வச்சு குத்தி உடைச்சு அதுல உருளைக்கிழங்கு மசாலா வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். சப்பாத்தி பூரி ரெண்டுல எது புடிக்கும் அப்படின்னு கேட்டா குழந்தைகள் எல்லாரும் போரின் தான் சொல்லுவாங்க ஏன்னா அதுதான் நல்லா புசுபுசுன்னு இருக்கும் சாப்பிடுவதற்கு ரொம்ப சாஃப்டா இருக்கும் அப்படின்னு குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

ஆனா என்னதா இந்த பூரி எண்ணெயில் பொரிச்சு எடுக்குறதால உடம்புக்கு ஆரோக்கியமானது இல்ல அப்படின்னு சொன்னாலும் எப்பவாவது ஒரு தடவை நம்ம இதை செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில எப்பவும் ஒரே மாதிரியா பூரி செய்யாம கொஞ்சம் டிஃபரண்டா நல்லா மொறு மொறுன்னு இருக்கிற மாதிரி ராஜஸ்தான்ல ஃபேமஸா இருக்கக்கூடிய ரவா பூரி தான் செய்யப் போறோம். இந்த ரவா பூரி சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா நல்லா மொறு மொறுன்னு இருக்கும்.

Advertisement

ராஜஸ்தான்ல செய்ற மாதிரி இதுல கொஞ்சம் மசாலாக்கள் எல்லாம் சேர்த்து செஞ்சோம் அப்படின்னா இன்னும் கொஞ்சம் கூடுதலா சுவை கிடைக்கும். நீங்க இப்பவாச்சும் ஒரு தடவ இந்த ராஜஸ்தான் ரவா புரிய உங்க வீட்ல இருக்கவங்களுக்கு செஞ்சு கொடுத்தா போதும் அதுக்கப்புறம் அவங்க அடிக்கடி இதை செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். ரொம்பவே ஈசியா சீக்கிரமாக செய்யக்கூடிய இந்த ரவா பூரி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க

ராஜஸ்தான் ரவா பூரி | Rajasthan Rava Poori Recipe in Tamil

Advertisement
Print Recipe
சப்பாத்தி பூரி ரெண்டுல எது புடிக்கும் அப்படின்னு கேட்டா குழந்தைகள் எல்லாரும் போரின் தான் சொல்லுவாங்க ஏன்னா அதுதான் நல்லா புசுபுசுன்னு இருக்கும் சாப்பிடுவதற்கு ரொம்ப சாஃப்டா இருக்கும் அப்படின்னு குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். ராஜஸ்தான்ல செய்ற மாதிரி இதுல
Advertisement
கொஞ்சம் மசாலாக்கள் எல்லாம் சேர்த்து செஞ்சோம் அப்படின்னா இன்னும் கொஞ்சம் கூடுதலா சுவை கிடைக்கும். நீங்க இப்பவாச்சும் ஒரு தடவ இந்த ராஜஸ்தான் ரவா புரிய உங்க வீட்ல இருக்கவங்களுக்கு செஞ்சு கொடுத்தா போதும் அதுக்கப்புறம் அவங்க அடிக்கடி இதை செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க.
Course Breakfast, dinner
Cuisine rajasthan
Keyword Rajasthan Rava Poori
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 3 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கொத்தமல்லி இலைகள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை சேர்த்து அதனுடன் சுடு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஊற வைத்த ரவையுடன் கோதுமை மாவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  • அதனுடன் கொத்தமல்லி இலைகள் சீரகத்தூள் சில்லி ஃப்ளேக்ஸ் வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து பூரி மாவுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  •  
    இப்பொழுது அதில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரியாக போட்டு எடுத்தால் சுவையான ரவா பூரி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 13g | Protein: 2.8g
Advertisement
Ramya

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

8 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

16 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

24 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago