Advertisement
சைவம்

இப்படியும் கூட ரசம் சாதம் செய்யலாம் ? இரவு உணவுக்கு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

குக்கரில் செய்யப்படும் ரசம் சாதம் செய்முறை இதோ. வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் புது விதமாக இந்த ரச சாதத்தை செய்யப்போகின்றோம். படிக்கும்போது இது ரசம் சாதமா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு வரலாம்.அவ்வளவு அருமையான மனமும் ருசியும் இருக்கும். ஆனால் மிஸ் பண்ணாம இந்த ரசம் சாதத்தை செய்து ருசித்து பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். உடம்பே முடியல, ஆனா சுட சுட ஏதாவது சாப்பிடனும் போல இருக்குது அப்படின்னா இந்த ரச சாதம் உங்களுக்கு கை கொடுக்கும்.
5 மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட விருந்து உண்ணலாம் என்பது பழமொழி. இவ்வாறு மிளகிற்க்கு அவ்வளவு அற்புதமான சக்தி இருக்கிறது. விஷத்தை முறிக்கும் திறன் பெற்றது இந்த மிளகு. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சளி பிடித்தாலும் மிளகு ரசம் வைத்து கொடுத்தால் போதும். சளி இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

உடல் சோர்வாக இருந்தாலும் அல்லது காய்ச்சலாக இருந்தாலும், சளிப் பிடித்திருந்தாலும் மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதம் கொடுப்பது தான் அனைவரது வீட்டிலும் வழக்கம். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் இந்த ரசம் சாதத்தை கலவை உணவாகவும் செய்திட முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

ரச சாதம் | Rasam Sadam Recipe In Tamil

Print Recipe
5 மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட விருந்துஉண்ணலாம் என்பது பழமொழி. இவ்வாறு மிளகிற்க்கு அவ்வளவு அற்புதமான சக்தி இருக்கிறது.விஷத்தை முறிக்கும் திறன் பெற்றது இந்த மிளகு. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்சளி பிடித்தாலும் மிளகு ரசம் வைத்து
Advertisement
கொடுத்தால் போதும். சளி இருந்த இடம் தெரியாமல்போய் விடும். உடல் சோர்வாக இருந்தாலும் அல்லது காய்ச்சலாக இருந்தாலும், சளிப் பிடித்திருந்தாலும்மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதம் கொடுப்பது தான் அனைவரது வீட்டிலும் வழக்கம். அப்படிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் இந்த ரசம் சாதத்தை கலவை உணவாகவும்செய்திட முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword rasam sadham
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 157

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 புளி நெல்லிக்காய்அளவு
  • 1 கப் சாதம்
  • 1 கைப்பிடி துவரம் பருப்பு
  • 2 தக்காளி
  • 1 தேக்கரண்டி மிளகுதூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள் சிறிதளவு
  • உப்பு தேவைக்கு
  • 3 தேக்கரண்டி எண்ணெய்

வறுத்து பொடிக்க:

  • 1 பூண்டு
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1//2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி கடலைபருப்பு

விழுதாக்க

  • 8 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 2 பச்சைமிளகாய்

Instructions

  • பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வெறும் வானலியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மொத்தமாக கொட்டி சிறுதீயில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
  • பின்னர் ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.விழுதுக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் ஒரு சற்றுக்கு மட்டும் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும், இல்லையேல் அம்மியில் தட்டிக் கொள்ளலாம்.
  • சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடிந்த விழுதை சேர்த்து வதக்கவும்.பின்னர் வறுத்து பொடித்த தூளை சேர்க்கவும்.அதன் பின் தக்காளியை பிசைந்து விடவும்.
  • பின்னர்மற்ற தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல்.உப்பு மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்,
  • அதன் பின் சாதத்தை கொட்டி ஒரு முறை கொதிக்க விட்டு இறக்கவும்.

Notes

  1. சுட்ட அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல்

Nutrition

Serving: 500g | Calories: 157kcal | Carbohydrates: 65g | Protein: 1g | Fat: 2g | Saturated Fat: 0.2g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 258mg | Fiber: 6g | Sugar: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

7 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

2 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

12 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

13 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

14 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

17 மணி நேரங்கள் ago