Advertisement
சைவம்

பஞ்சு போன்ற மென்மையான ரவா ஆப்பம் சுட சுட சாப்பிட இப்படி மிஸ் பன்னாம செய்து பாருங்க!

Advertisement

ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருகிறது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் தெரியவில்லை. பெரும்பாலும் மக்கள் வீட்டில் ஆப்பம் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள் நீங்கள் வீட்டிலேயே ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம்.

இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலை செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் பிடித்த உணவாக மாறிவிடும். அதனால் இன்று தேவாமிர்தம் போல் சுவையான ரவா ஆப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

ரவா ஆப்பம் | Rava Appam Recipe in Tamil

Print Recipe
பெரும்பாலும் வீட்டில் ஆப்பம் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள் நீங்கள் வீட்டிலேயே ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலை செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் பிடித்த உணவாக மாறிவிடும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Appam, ஆப்பம்
Prep Time 20 minutes
Cook Time
Advertisement
20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 44

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • ¾ கப் வெள்ளை அவல்
  • 1 கப் ரவா
  • ¾ கப் புளிச்ச தயிர்
  • ½ கப் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • 1 tbsp ஆப்ப சோடா or ENO

Instructions

  • முதலில் ஒரு முக்கால் கப் அளவுக்கு வெள்ளை அவலை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக அலசி அலசி கொள்ளுங்கள். அதன் பின்பு அதனுடன் ஒரு கப் அளவு வெள்ளை ரவை சேர்த்துக் கொள்ளவும்.
    Advertisement
  • பின் முக்கால் கப் அளவு புளிச்ச தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு 15 நிமிடங்கள் பவுளை முடி வைத்து நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள்.
  • பின் ரவை நன்றாக ஊறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள் பின்பு அரைத்த மாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து கொள்ளவும்.
  • பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடா அல்லது ENO சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு பால் சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள் தற்போது மாவு நுரையாக வரும் அவ்வளவு தான் ஆப்பம் சுடுவதற்கு மாவு தயாராகிவிட்டது.
  • ஆப்பம் சுடும் பாத்திரம் அல்லது தோசைக்கல் ஏதேனும் ஒன்றை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் மாவை ஊற்றி அதன் மேல் ஒரு மூடியை வைத்து மூடி விடுங்கள் அந்த ஆவியில் மேற்புறமாக மாவு நன்றாக வெந்து வந்ததும் ஆபத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இவ்வாறாக மீறி இருக்கும் மாவையும் ஆப்பமாக சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான ரவா அப்பம் தயாராகிவிட்டது. இதனுடன் தேங்காய்பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

Nutrition

Serving: 60gram | Calories: 44kcal | Carbohydrates: 38g | Protein: 6g | Fat: 0.2g | Saturated Fat: 0.7g | Sodium: 3mg | Potassium: 56mg | Fiber: 1.4g | Sugar: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

40 நிமிடங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

10 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

11 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

13 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

18 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

21 மணி நேரங்கள் ago