வீட்டில் ரவா இருந்தால் போதும் சூப்பரான ரவா பர்பி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! அப்புறம் அடிக்கடி நீங்களே செய்வீங்க!
சிறுவயதில் 80 மற்றும் 90களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென்
சிறுவயதில் 80 மற்றும் 90களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த ரவை பர்பியை தீபாவளிக்கு செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் ரவை இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரவை பர்பி தான் செய்து பார்க்க போகிறோம்.
ரவையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின் E, வைட்டமின் B, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற ரவை பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த ரவை பர்பி சுலையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம். இன்று ரவை வைத்து அருமையான ரவா பர்பி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கோதுமை ரவை பாயசம் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!