பாயசம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. வீட்டில் நல்ல காரியம் என்றாலே பாயசம் கண்டிப்பாக இருக்கும். கல்யாண வீடுகளில் தரப்படும் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். அத விட சுவையாக கோதுமை ரவை வைத்து சுவையான பாயசம் நம் வீட்டிலே செய்து விடலாம். கோதுமை ரவை உடலுக்கு மிகவும் நல்லது, ஆரோக்கியமானதும் கூட. இனி பாயசம் செய்ய வேண்டும் என்று தோன்றும் போது இந்த மாறி கோதுமை ரவை
இதையும் படியுங்கள் : ருசியான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பாயசம் செய்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் இந்த பாயசம் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.இதை செய்வதும் மிகவும் சுலபம், குறைந்த நேரத்தில் ருசியாக செய்து விடலாம். கோதுமை ரவை பாயசத்தை எப்படி செய்வதென்று கீழே கொடிக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
கோதுமை ரவை பாயசம் | Wheat Rava Payasam Recipe In Tamil
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
- ½ கப் கோதுமை ரவை
- ¼ கப் பொடித்த வெள்ளம் காட்சி வடிகட்டியது
- ⅛ டீஸ்பூன் உப்பு
- ¼ டீஸ்பூன் ஏலக்காய் பொடி
- 1 கப் தேங்காய் பால் முதல், இரண்டாம் பால்
- முந்திரி, திரிட்சை தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
செய்முறை
செய்முறை:
- முதலில் ஒரு குக்கரில் அடுப்பில் வைத்து பாசி பருப்பு கழுவி சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பிறகு அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து அதே குக்கரில் கோதுமை ரவை சேர்த்து மிதமான தீயில் நிறம் மாற பொரிந்து வரவும் பிறகு வறுத்த பாசி பருப்பை இத்துடன் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 விசில் வர வேகவைத்துக்கொள்ளவும்.
- வெந்தவுடன் ¼ கப் வெள்ளத்தை ¼ கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடித்து அத்துடன் சேர்க்கவும். மற்றும் உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- நிறம் மாறி வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- கொதித்தவுடன் அடுப்பை அனைத்து, முந்திரி, மற்றும் திராட்சை இரண்டையும் நெயில் வறுத்து பாயசத்தில் சேர்த்து கலந்து விடவும். தேவைப்பட்டால் தேங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
- இப்பொழுது சுவையான கோதுமை ரவை பாயசம் தயார்.