- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் செய்து சுவையாக உண்ணலாம்.
இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?
இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.அதனால் இன்று இந்த கல்யாண வீட்டு பாசி பருப்பு பயாசம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்..
Ingredients
Method
பாசிப்பருப்பு பாயாசம் செய்ய முதலில் ஒரு கடாயில் பாசிப்பருப்பை எண்ணெய் ஊற்றாமல் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கர் வறுத்த பாசிப்பருப்பை போட்டு அதில் 5 கப் அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் கொண்டு வேக வைக்க வேண்டும்.
பின் வேறு கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தை பாகுபதம் காய்ச்சாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்.
வேகவைத்த பாசிப்பருப்பில் வெல்லத்தை சேர்த்து கொள்ள வேண்டும் பின்னர் அதில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
பின்னர் வறுத்த முந்திரியை சேர்க்க வேண்டும். இப்பொழுது சத்தான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.






