வீட்டில் ரவா இருந்தால் போதும் சூப்பரான ரவா பர்பி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! அப்புறம் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

- Advertisement -

சிறுவயதில் 80 மற்றும் 90களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த ரவை பர்பியை தீபாவளிக்கு செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் ரவை இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரவை பர்பி தான் செய்து பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

ரவையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின் E, வைட்டமின் B, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற ரவை பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த ரவை பர்பி சுலையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம். இன்று ரவை வைத்து அருமையான ரவா பர்பி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
4.50 from 2 votes

ரவா பர்பி | Rava Burfi Recipe In Tamil

சிறுவயதில் 80 மற்றும் 90களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த ரவை பர்பியை தீபாவளிக்கு செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் ரவை இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரவை பர்பி தான் செய்து பார்க்க போகிறோம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: snacks, sweets
Cuisine: Indian
Keyword: Rava Burfi
Yield: 4 People
Calories: 345kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 பெரிய தட்டு

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை
  • 3 கப் பால்
  • 1 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 5 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம்
  • 2 டேபிள் ஸ்பூன் முந்திரி

செய்முறை

  • முதலில் பின்‌ ஒரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் ரவையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு சிவக்க வறுக்கவும்.
  • பின் ரவையில் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள் சேர்த்து ரவை சிறிது கெட்டியானவுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • கடைசியாக நெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு பெரிய தட்டில் எண்ணெய் தடவி ரவை கலவையை அதில் சேர்த்து நன்றாக பரப்பிக் கொள்ளவும். பின் அதன் மேல் நறுக்கிய பாதாம் முந்திரி தூவவும்.
  • இதனை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்‌. அரை மணிநேரம் கழித்து பர்பி மாதிரி வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ரவை பர்பி தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 345kcal | Carbohydrates: 7.1g | Protein: 12g | Fat: 1.5g | Sodium: 35mg | Potassium: 140mg | Fiber: 1.2g | Calcium: 2mg | Iron: 8mg

இதனையும் படியுங்கள் : ருசியான கோதுமை ரவை பாயசம் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!