மொறு மொறுன்னு சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! இது வேற லெவல் டேஸ்ல இருக்கும்!!!
திருமணங்களில் போடப்படும் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. . சாப்பாடு நன்றாக ருசியாக அமைந்துவிட்டால் திருமணத்திற்கு வந்தவர்கள் மனதார வாழ்த்தி செல்வார்கள்.அவ்வாறு திருமணத்திற்கு செல்லும் மற்றவர்களும் அங்கு பந்தியில் போடப்படும் உணவு எந்தவித சுவையுடன் இருக்க போகிறது என்ற எதிர்பா
திருமணங்களில் போடப்படும் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. . சாப்பாடு நன்றாக ருசியாக அமைந்துவிட்டால் திருமணத்திற்கு வந்தவர்கள் மனதார வாழ்த்தி செல்வார்கள்.அவ்வாறு திருமணத்திற்கு செல்லும் மற்றவர்களும் அங்கு பந்தியில் போடப்படும் உணவு எந்தவித சுவையுடன் இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்புகள் உடனே செல்கின்றனர். அவ்வாறு பந்தியில் வைக்கப்படும் சுவையான வாழைக்காய் சிப்ஸ் வீட்டிலும் அதே சுவையில் செய்யலாம்.
பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் உருளைக்கிழங்கை வைத்து தானே சிப்ஸ் போடுவாங்க. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வாழைக்காயை வைத்தும் சூப்பரான சிப்ஸை மொறுமொறுன்னு ருசியாக போடலாம். கொஞ்சம் பொறுமையாக பக்குவமாக பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி வாழைக்காய் சிப்ஸ் போட்டால் எல்லோருக்கும் ஒரு கிறிஸ்டியான சூப்பர் ஸ்னாக்ஸ் சிப்ஸ் கிடைக்கும். இந்த வாழைக்காய் சிப்ஸ் எல்லா வெரைட்டி ரைஸ்கும் தொட்டுக்கொள்ள சூப்பரா இருக்கும் .
புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சாம்பார்சாதம், புதினா சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். ஆஹா அருமையான ருசி. அது மட்டுமல்லாமல் இந்த வாழைக்காய் சிப்ஸ் போட்டு நன்றாக ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது சில்வர் டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் 4 லிருந்து 5 நாட்கள் வரை அப்படியே இருக்கும். கெட்டுப் போகாது. நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.