வராத பணம் வருவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!!

நாம் ஒருவருக்கு கடனாகவோ அல்லது கைமாத்தாகவோ பணத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் கொடுத்திருப்போம். ஆனால் அது நமக்கு திரும்ப கிடைக்காது. ஒரு சிலர் கொடுத்து விடுவார்கள் ஆனால் ஒரு சிலர் கொஞ்சம் இழுத்து அடிப்பார்கள். இழந்த செல்வங்கள் சொத்துக்கள் போன்றவற்றை திரும்ப பெறுவதற்கு வீட்டிலேயே பல எ

By Prem Kumar · 16/4/2025

நாம் ஒருவருக்கு கடனாகவோ அல்லது கைமாத்தாகவோ பணத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் கொடுத்திருப்போம். ஆனால் அது நமக்கு திரும்ப கிடைக்காது. ஒரு சிலர் கொடுத்து விடுவார்கள் ஆனால் ஒரு சிலர் கொஞ்சம் இழுத்து அடிப்பார்கள். இழந்த செல்வங்கள் சொத்துக்கள் போன்றவற்றை திரும்ப பெறுவதற்கு வீட்டிலேயே பல எளிய பரிகாரத்தை செய்யலாம். அந்த வகையில் வராத பணத்தையும் வர வைப்பதற்கு இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.

கடன் கொடுத்தவர்கள்

பணம் அதிகமாக கடன் வாங்கியவர்களுக்கும் கஷ்டம் தான் அதேசமயம் பணத்தை அதிகமாக கொடுத்தவர்களுக்கும் கஷ்டம் தான். பணத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு சிலர் கொடுக்காமல் அலைய வைப்பார்கள். வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றுவது மிகவும் தவறான செயல் கஷ்டப்பட்டு உழைத்த சம்பாதித்த பணம் என்றும் வீண் போகாது. எனவே நீங்கள் இழந்த பணத்தை செல்வங்களை சொத்துக்களை திரும்ப பெறுவதற்கு இந்த எளிமையான பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம்.

குத்துவிளக்கு பரிகாரம்

வீட்டில் கணவன், மனைவி பிரச்சனை குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் போன்றவை இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு பணவரவையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. மகாலட்சுமி தாயாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து இரு பக்கமும் குத்துவிளக்கு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வர அனைத்து சந்தோஷங்களும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இழந்த பணத்தை திரும்ப பெற குத்துவிளக்கு பரிகாரம்

வராத பணமும் திரும்ப வருவதற்கும் இழந்த சொத்துக்களை மீட்டு எடுப்பதற்கும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு வெள்ளை துணியில் கருப்பு எள் சிறிதளவு வெந்தயம் சிறிதளவு கல் உப்பு சேர்த்து முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்போது அந்த முடிச்சை பூஜை அறையில் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜை அறையில் வைத்து விட்டு பிறகு அந்த முடிச்சை எடுத்து வீட்டில் உள்ள கன்னி மூலையில் வைக்க வேண்டும். 48 நாட்களுக்கு ஒரு முறை இந்த முடிச்சில் உள்ள பொருட்களை மாற்றிவிட்டு பழைய பொருட்களை மரத்தடியில் போட வேண்டும். இதனை ஒரு முறை செய்தாலே நீங்கள் இழந்த செல்வம் அனைத்தையும் திரும்ப பெற முடியும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் அதிகமாக சேர வாஸ்து பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full