சுக்கிர பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!!

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். எந்த கிரகத்தின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமோ அந்த கிரகத்திற்குரிய நாளில் அந்த கிரகத்தை நாம் வழிபாடு செய்வது சிறந்தது. அந்த வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படக்கூடிய பணத்தை பெறுவதற்கும் ஆடம்பரமான வசதியான

By Prem Kumar · 27/3/2025

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். எந்த கிரகத்தின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமோ அந்த கிரகத்திற்குரிய நாளில் அந்த கிரகத்தை நாம் வழிபாடு செய்வது சிறந்தது. அந்த வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படக்கூடிய பணத்தை பெறுவதற்கும் ஆடம்பரமான வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கும் சுக்கிர பகவானின் அருள் நமக்கு தேவைப்படும். அப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு அவருக்கு உரிய கிழமையான வெள்ளிக்கிழமை உள்ளது அந்த நாள் அன்று அவரை நினைத்து தீபம் ஏற்றுவது சிறந்தது. தீபம் ஏற்றும் முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிர பகவான் அருள்

சுக்கிர பகவானுடைய அருள் ஒவ்வொருவருக்கும் கிடைத்து விட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான கஷ்டங்களும் இருக்காது சுகபோகமான வாழ்க்கையை வாழ முடியும். ஒரு விஷயம் நாம் நினைத்தால் அது உடனே நமக்கு கிடைத்துவிடும் அப்படிப்பட்ட பாக்கியத்தை கொடுக்கக் கூடியவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் அதிபதியாக மகாலட்சுமி தாயார் விளங்குகிறார். அவரை வழிபாடு செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். இதோடு சுக்கிர பகவானுக்குரிய தீப வழிபாட்டு முறையையும் நாம் பின்பற்றுவது நம்முடைய கர்ம வினைகளையும் தீர்க்கும் அவருடைய அருளும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.

சுக்கிர பகவானுடைய அருளை பெற ஏற்ற வேண்டிய விளக்கு

ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் சுக்கிர பகவானுக்குரிய தானியமான பச்சரிசியையும் மொச்சை பயிறையும் கலந்து வைக்க வேண்டும். அதற்கு நடுவே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அந்த நாணயத்திற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுக்கிர பகவானுக்குரிய கற்கண்டை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு அகல் விளக்கில் பசு நெய் சேர்த்து திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் சுக்கிர பகவானின் மந்திரம் தெரிந்தால் அதனை கூறி வழிபாடு செய்யலாம்.

தீபத்தை ஏற்ற வேண்டிய நேரம்

இந்த தீபத்தை சுக்ர ஹோரையில் வெள்ளிக்கிழமை என்று காலை மதியம் இரவு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம் காலை சுக்கிர ஹோரை என்பது ஆறு மணி முதல் ஏழு மணி வரை. மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை. இரவு 8:00 மணி முதல் 9 மணி வரை. அந்த நேரத்தில் தான் நாம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். தீபம் 48 நிமிடங்கள் எரிய வேண்டும் அதன் பிறகு அதனை குளிர வைக்கலாம். மறுநாள் காலை பச்சரிசியையும் மொச்சையையும் பசு மாடு அல்லது பறவைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இந்த தீபத்தை ஏற்று வைத்து விட்டு சனிக்கிழமை பசு மாட்டிற்கும் பறவைகளுக்கும் அரிசியையும் மொச்சை பயிறையும் தானமாக கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் இருக்க கூடிய கர்மவினைகள் குறைந்து எந்தவித தடையும் இல்லாமல் செல்வ செழிப்பான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.

இதனையும் படியுங்கள் : சுக்கிர வசியம் ஏற்பட பரிகாரம்

Recipes AMP · Quick view
View full