ரிஷப விரதம் கடைபிடிப்பதன் முறைகளும் அதன் பலன்களும்
விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். இந்து சமயத்தில் உள்ள ரிஷப விரதத்தை பற்றி
விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். இந்து சமயத்தில் உள்ள ரிஷப விரதத்தை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம். ரிஷப வாகனம் அல்லது விடை வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களின் படி ரிஷபம் என்பது சிவனின் வாகனம் ஆகும். ஈசனுக்குரிய மிகவும் விசேஷமான விரதங்களில் ஒன்று ரிஷப விரதம். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டிய அதன் பலன்கள் யாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப விரதம்
எட்டு பெரும் துறவுகளில் இதுவும் ஒன்று. சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் நேரத்தில், அதாவது வைகாசி மாதத்தில் (மே மாதத்தின் நடுப்பகுதி முதல் ஜூன் நடுப்பகுதி வரை), வளரும் சந்திர கட்டத்தில் எட்டாம் அமாவாசை நாளில் (அஷ்டமி) இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம் ஸ்கந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது. இவ்விரதத்தைப் பின்பற்றியே திருமால் கருடவாகனத்தையும், இந்திரன் ஐராவதத்தையும், குபேரன் முத்து விமானத்தையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
விரதம் இருக்கும் முறை
சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரை நோக்கி இருக்கும் விரதம் ரிஷப விரதம் எனப்படும். ரிஷப விரதம் மேற்கொள்ளும் போது காலையில் எழுந்ததும் நீராடி விட்டு, வாசலில் கோல மிட வேண்டும். பின் நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானின் புகைப்படத்தை வீட்டில் வைத்து பூ போட்டு வணங்க வேண்டும். பின் சிவபெருமானுக்கு விளக்கேற்றி, சாம்பிராணி தூபம் காட்டி சிவனுக்கு பிடித்த அரிசியால் செய்த பாயசத்தை நைவேத்தியமாக படைத்து மனதார சிவனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் போது மாலையில் சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். இரவில் வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும். விரதம் இருக்கும் நாளன்று காலை முதல் இரவு வரை உண்ணாமல் இருக்க வேண்டும், முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம். விரதத்தை முடிக்க மறுநாள் காலையில் சிவாலய தரிசனம் செய்து நிறைவு செய்யலாம். அப்படி காலையில் சிவாலய தரிசனம் செய்யும் போது ஏதேனும் ஒரு உணவை வீட்டிலேயே செய்து தானம் அளித்து விட்டு வீடு திரும்பியதும் அதை பிரசாதமாக கருதி உண்ண வேண்டும். சிவபெருமானை நினைத்து இவ்விரத வழிபாடுகளை மேற்கொண்டால் இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியையும் பெறலாம்.
விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்
வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபக்கத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும். இந்த விரதம் ரிஷப மாதம் எனப்படும் வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமி திதியில் கடைபிடிக்கப்படும். வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. இந்த விரதத்தினால் வாகன யோகம் அடையலாம். வாகனம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். வாகன விபத்துகள் அனைத்தும் நீங்கும். ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும், அனைத்து நியாயமான ஆசைகளும் பூர்த்தியாகும், அஷ்ட யோகம் ஏற்படும், சிவயோகி ஆகவும் கூடும். பிரதோஷ வழிபாட்டினால், வறுமை, பயம், பாவம், மரணவேதனை இவை எல்லாம் ஒழியும் என நம்பப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்!