டிபன் பாக்ஸில் கொடுத்து விட சாமை வெஜிடபிள் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!
வெஜிடபிள் பிரியாணி என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சாமை அரிசியில் வெஜிடபிள் பிரியாணி ஒருமுறை செய்து பாருங்களேன் அருமையாக இருக்கும். இந்த வெஜிடபிள் பிரியாணி சாமை அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, குத
வெஜிடபிள் பிரியாணி என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சாமை அரிசியில் வெஜிடபிள் பிரியாணி ஒருமுறை செய்து பாருங்களேன் அருமையாக இருக்கும். இந்த வெஜிடபிள் பிரியாணி சாமை அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, குதிரைவாலி போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல சாம்பார் சாதம் செய்தால் ருசியாக இருக்கும். வாங்க சுலபமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த சாம்பார் சாதத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
சிறுதானியங்கள் ஏராளமான நன்மைகள் நிறைந்தது. குறிப்பாக அது இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது. மேலும் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். ஆனால் இவ்வாறான சிறு தானியங்களில் செய்யும் உணவுகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆகவே அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் வெஜிடபிள் பிரியாணி சமைத்துக் கொடுத்தால், இந்த சிறுதானிய உணவையே அவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தி விடலாம். அவ்வாறு அனைவருக்கும் பிடித்த சுவையில் ஆரோக்கியமான சிறுதானியமான சாமை கொண்டு சுவையான வெஜிடபிள் பிரியாணி செய்து சுவைத்து மகிழுங்கள். சாமை தவிர குதிரைவாலி, வரகு, திணை , போன்றவற்றை கொண்டும் நீங்கள் பிரியாணி செய்யலாம். வாருங்கள் இந்த பிரியாணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.