தக்காளியே இல்லாம இந்த மாதிரி ஒரு தடவை சால்னா செஞ்சு பாருங்க!!

பரோட்டாவுக்கு மட்டும் சால்னா ஊத்தி சாப்பிடாம சப்பாத்தி பூரி இட்லி, தோசை அப்படின்னு எல்லாத்துக்குமே சால்னா ஊத்தி சாப்பிடலாம். இப்போ கடைகளில் சால்னா வாங்குவதை விட வீட்டிலேயே எல்லாரும் சூப்பரா சால்னா செய்றாங்க. முட்டை சால்னா சிக்கன் சால்னா வெஜ் சால்னா எம்டி சால்னா அப்படின்னு எல்லாமே

By Prem Kumar · 10/10/2025

பரோட்டாவுக்கு மட்டும் சால்னா ஊத்தி சாப்பிடாம சப்பாத்தி பூரி இட்லி, தோசை அப்படின்னு எல்லாத்துக்குமே சால்னா ஊத்தி சாப்பிடலாம். இப்போ கடைகளில் சால்னா வாங்குவதை விட வீட்டிலேயே எல்லாரும் சூப்பரா சால்னா செய்றாங்க. முட்டை சால்னா சிக்கன் சால்னா வெஜ் சால்னா எம்டி சால்னா அப்படின்னு எல்லாமே வீட்லையே செய்ய முடியும் அதுவும் கடையில கிடைக்கிற அதே டேஸ்ட்ல செய்ய முடியும். டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே வீட்ல அடிமையாகிடுவாங்க. ஆனா வீட்ல தக்காளியே இல்ல அப்படின்னா அப்போ எப்படி இந்த ரெசிபியை ட்ரை பண்ண முடியும் அப்படின்னு யோசிக்கிறீங்களா? கண்டிப்பா தக்காளி இல்லாம ஒரு சால்னா செய்யலாம் அதுவும் ஒயிட் சால்னா செய்ய முடியும்.

ஒரு சிலருக்கு நிறைய மசாலா போட்டு செய்கிற சால்னாவை விட ப்ளைனா இருக்கிற மசாலா அதிகமா சேர்க்காத சால்னா ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு இந்த ஒயிட் சால்னா ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு புளிப்பு சுவை தேவை அப்படின்னா தயிர் சேர்த்துக்கோங்க அப்படி இல்லன்னா தயிர் அவாய்ட் பண்ணிக்கலாம். ஆனா தயிர் இல்லாமல் கூட இந்த ரெசிபி ரொம்பவே டேஸ்டா இருக்கும். கண்டிப்பா எல்லாரும் வீட்லயும் புதினா இலைகள் இருக்கும் அப்படி இருந்துச்சுன்னா சேர்த்துக்கோங்க இல்லன்னா விட்டுடுங்க மத்தபடி இதுல சேர்த்து இருக்கிற எல்லா பொருட்களையும் சேர்த்து செய்யும் போது அவ்ளோ ருசியா இருக்கும்.

பத்து நிமிஷத்துல இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். குக்கர்ல மூணு விசில் விட்டு இறக்கினால் கமகமன்னு சூப்பரா ஒரு சால்னா ரெசிபி ரெடியாயிடும். இந்த சுவையான சால்னா ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே பத்து இட்லி வரைக்கும் கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட இந்த புரட்டாசி மாதத்தில் சுவையான இந்த அசைவ சுவையில் இருக்கக்கூடிய ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான ரோட்டு கடை சைவ சால்னா செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full