ஆகஸ்ட் 18ம் தேதி சனி நட்சத்திர பெயர்ச்சி! எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன்கள்!

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் இரட்டிப்பாக

By ·

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தான் இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனிபகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்யப் போகின்றார். சனி பகவான் ஆகஸ்ட் 18 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். தொழில் ரீதியாக சவால்களை சந்திக்க நேரிடும். வேலையில் தடைகள் ஏற்படலாம்.

ரிஷபம்

சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்பு பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம்

மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்த வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும். இனி ஓரளவு வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் உழைக்க வேண்டியிருக்கும். பொறாமை கொண்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

உத்தியோகத்தில் இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. புதிய வழியில் இருந்து வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க நேரிடும்.

சிம்மம்

பங்கை போராடிப் பெறுவீர்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும் அனுசரித்து செல்லவும். அரசு காரியங்கள் தடையில்லாமல் முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படும். நிதி நிலை வலுவாக இருக்கும்.

கன்னி

வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் முடியும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சினைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அரசுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு பெறலாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்

தொழிலில் சில ஏற்ற தாழ்வுகள் வரலாம். உத்தியோகத்தில் டென்ஷனை சந்திக்கலாம். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாக கையாளுங்கள். மகனின் உயர் கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். இக்காலகட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய மாற்று வழி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

விருச்சிகம்

புதிய திசையில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைப்பேறு கிட்டும். மனைவி உறுதுணையாக இருப்பார். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறலாம். வெளிநாடு சென்று படிக்கலாம். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மகரம்

புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

கும்பம்

தொழிலில் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். இக்காலகட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு.

மீனம்

உத்வேகத்துடன் இருப்பீர்கள். பணியிடத்தில் பொறுப்புகள் கூடும். அழுத்தம் அதிகரிக்கும். அலட்சியமாக இருக்க வேண்டாம். கணவர் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார். மாமியார், மாமனார் உங்களை பெருமை பேசுவார்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

இதனையும் படியுங்கள் : கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் இந்த ராசிக்காரர்களின் கனவு நிறைவேறும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை