சனி நட்சத்திர பெயர்ச்சியால் கோடீஸ்வரராக போகும் ராசிகள் இவை தான்!!
ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். ச
ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். சனி கொடுக்க எவர் தடுப்பார், சனி தடுக்க எவர் கொடுப்பார் என்ற சொற்றொடர்க்கு ஏற்றவாறு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதனுடன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும் சனி. தற்போது குருவின் அதிபதி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணித்து வரும் சனி பகவான் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி, 2024 அன்று, அதாவது இன்னும் வக்ர நிலையில் நகர்ந்து பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் பெயர்ச்சி அடைந்தார். இதன் பின் சனியின் அடுத்த நட்சத்திர மாற்றம் அக்டோபர் மாதம் சதயம் நட்சத்திரத்தில் நிகழும். தற்போது குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், கோடீஸ்வர யோகத்தையும் தரப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். சட்ட விஷயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும், தொடர்ந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். சனி பகவானின் அருளால் நிதி நிலை மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நன்மை பயக்கும். பல ஆண்டுகளாக தடைப்பட்டு வந்த பணிகள் இப்போது வேகவேகமாக நிறைவு பெறும். செல்வம் பெருகும், வங்கி இருப்பு அதிக்கலாம். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி உங்களுக்கு தொழில் அல்லது வணிகத் துறையில் மகத்தான வெற்றியைத் தரும். குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். சனிபகவான் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் பலனைத் தருவார்.
இதனையும் படியுங்கள் : கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் இந்த ராசிக்காரர்களின் கனவு நிறைவேறும்!