சனிபகவானுடைய தாக்கம் குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

சனிபகவானுடைய பெயரை கேட்டாலே ஒரு சிலருக்கு மிகவும் பயமாக இருக்கும். ஒருவருக்கு ஏழை சனி நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள் ஆனால் அப்படி கிடையாது. சனி பகவான் நீதிமானாக திகழ்கின்றவர். அதனால் நாம் செய்யும் காரியங்களுக்கு ஏற

By ·

சனிபகவானுடைய பெயரை கேட்டாலே ஒரு சிலருக்கு மிகவும் பயமாக இருக்கும். ஒருவருக்கு ஏழை சனி நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள் ஆனால் அப்படி கிடையாது. சனி பகவான் நீதிமானாக திகழ்கின்றவர். அதனால் நாம் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப தான் நமக்கு நல்லதே கெட்டவை என நடக்கும். ஜாதகத்தில் சனி பகவான் எப்படி இருந்தாலும் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.

சனிபகவானின் நீதி

உண்மையாக நேர்மையாக இருப்பவர்களை சனி பகவான் தண்டிக்கவே மாட்டார்.ஆனால் பொய் சொல்லி திருடி மற்றவர்களுக்கு பிரச்சனைகளை கொடுத்தால் நிச்சயமாக சனி பகவான் பாதிப்பை ஏற்படுத்துவார். எனவே முதலில் நாம் நீதிக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் நேர்மையாக இருப்பவர்களை சனி பகவான் நிச்சயமாக ஒன்றும் செய்ய மாட்டார்.

சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை

குளிக்கும்போது முதலில் தலையில் தண்ணீர் ஊற்றக்கூடாது. உடம்புக்கு ஊற்றிவிட்டு பிறகு தான் தலையில் ஊற்ற வேண்டும்.

எப்பொழுதுமே பாத்ரூம் சென்று வந்தால் கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு தான் வரவேண்டும். அப்படி செய்யவில்லை என்றாலும் கூட சனி பகவானால் பாதிப்புகள் ஏற்படும்.

வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போது கை கால்களை நன்றாக கழுவி விட்டு பிறகு தான் வீட்டிற்குள் வரவேண்டும்.

வீட்டில் நாம் சாப்பிடும் போது காகம் கரைந்து கொண்டே இருக்கும் அப்பொழுது காகத்திற்கு சாப்பாடு வைப்பது சனிபகவானின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாக்கும்.

இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை காண 12 ராசிக்காரர்களும் தானம் அளிக்க வேண்டிய பொருட்கள்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை