சனிப் பெயர்ச்சியால் 2025ல் அதிக நன்மைகளை அள்ளப் போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. இந்த சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்குபவரும் நீதிக் கடவுளுமான சனி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறார். நவகிரகங்க

By Prem Kumar · 7/9/2024

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. இந்த சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்குபவரும் நீதிக் கடவுளுமான சனி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறார். நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாக சனி கருதப்படுகிறது. எனவே, சனியின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சில ராசிக்காரர்களின் வாழ்வில் கொந்தளிப்பை உண்டாக்கும் அதே வேளையில், பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.

அடுத்த வருடம் அதாவது மார்ச் 2025ல் சனி கும்பம் ராசியிலிருந்து விலகி மீன ராசியை அடைகிறார். அவர் மார்ச் 29, 2025 முதல் ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருப்பார். அடுத்த ஆண்டு ஏற்படும் சனி பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும் என்றும், இந்த நேரத்தில் மரியாதை, செல்வம், புகழ், வேலை, சொத்து வாங்கும் திறன் போன்ற வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் 2025 முதல் 2027-ம் ஆண்டு வரை சிறப்பாக இருக்கப் போகிறார்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

சிம்ம ராசி

சிம்ம ராசியினருக்கு வாழ்க்கை முன்னெப்போதையும் விட சிறப்பாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் வரும். சனியின் அருளால் அவர்களுக்கு பெருமளவு பணம் வரப் போகிறது. கடந்த பல ஆண்டுகளாக உங்களுக்கு வாழ்க்கை கடினமாக உள்ளது. ஆனால் இவை சனி மீனத்தில் நுழையும் போதே படிப்படியாக முடிவுக்கு வரும். அத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கை எழும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ரீதியாக இருந்த பிரச்னைகள் தீரும்.

கன்னி ராசி

மீன ராசியில் சனியின் பிரவேசம் ஏற்படுவது கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய முன்னேற்றத்தை அளிக்கவுள்ளது. அவர்களது நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடனான உறவு பலப்படும். உங்களின் கடின உழைப்பும் போராட்டமும் மார்ச் 2025க்குப் பிறகு நல்ல பலனைக் கொடுக்கத் தொடங்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், இதன் மூலம் நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.

விருச்சிக ராசி

இது விருச்சிக ராசிக்காரர்களுக்கும் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பை விட அதிக பணம் கைக்கு வந்து சேரும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு செயலிலும் வெற்றியை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களும் வெற்றி பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

இதனையும் படியுங்கள் : சூரியன் மற்றும் சனியால் கோடீஸ்வரராகும் யோகம் கிடைக்கப் போகும் ஆறு ராசிகள்

Recipes AMP · Quick view
View full