சனி வக்ர நிவர்த்தியால் பணமழையில் நனையப் போகும் ராசிகள்!
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களுடைய ராசிகளையும் மாற்றும். கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கம் ஏற்படும். ராசி மாற்றத்தை தவிர நட்சத்திரமாற்றம், அஸ்தமன மாற்றம்,வக்ர நிவர்த்தி,வக்ர பெயர்ச்சி என பல
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களுடைய ராசிகளையும் மாற்றும். கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கம் ஏற்படும். ராசி மாற்றத்தை தவிர நட்சத்திரமாற்றம், அஸ்தமன மாற்றம்,வக்ர நிவர்த்தி,வக்ர பெயர்ச்சி என பலவித மாற்றங்களும் ஏற்படும். கிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமாக திகழக் கூடியது சனிபகவான் தான். தற்பொழுது சனி பகவான் வக்ர நிலையில் உள்ளார்.
தீபாவளி முடிந்து சில நாட்களுக்கு பிறகு நவம்பர் 15 ஆம் தேதி அன்று சனிபகவான் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார் ஜோதிட ரீதியாக இது மிகப்பெரிய நிகழ்வு. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சில தாக்கங்களும் ஏற்படும். அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெற போகும் சில ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் ஒழுக்கம் அமைதி பொறுமை போன்ற நல்ல குணங்கள் மேலோங்கி இருக்கும். இலக்குகளை அடைவதில் மிகவும் முனைப்புடன் செயல்படுவீர்கள். வேலை பார்க்கும் இடத்திலும் சமுதாயத்திலும் உறவுகளுக்கு இடையிலும் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சனிபகவானின் வக்ர நிவர்த்தி அதிகமான தன்னம்பிக்கையை கொடுக்கும் வேலை பார்க்கும் இடத்தில் முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்கலாம். அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள் அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் பலவிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் பெற அதிக வாய்ப்புள்ளது. கணவன் மனைவிக்கிடையே உறவு மேம்படும் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்
கும்ப ராசி
கும்ப ராசியில் இந்த வக்ர நிவர்த்தி பல நல்ல பலன்களை அளிக்க கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு படிப்பார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
மீன ராசி
மீன ராசிக்கு இந்த சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் ஒழுக்கமான வாழ்க்கை நல்ல வாழ்க்கை அமையும். கடினமாக உழைத்து இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் வேலை பார்க்கும் இடத்தில் அதிகரிக்கும். இடமாற்றம் கிடைக்கும். தொழில் விரிவடைந்து அதன் லாபம் அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெற போகும் சில ராசிகள்!