கர்ம பலன்களை அளிக்கக்கூடிய சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போவது இந்த ஐந்து ராசிக்காரர்கள் தான்!

பொதுவாக கிரகங்களிலேயே மிகவும் அனைவராலும் பார்த்து பயப்படக்கூடிய ஒரு கிரகம் என்றால் அது சனி கிரகம் தான். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்க போகிறார் என்றால் அதனால் நல்லவைகளையும் தீயவைளையும் சேர்த்து அனுபவிக்கின்ற மனப்பக்குவத்திற்கு நாம் வரவேண்டும். கர்ம பலன்களை அளிக்கக்கூடிய சனி பகவ

By Prem Kumar · 19/4/2024

பொதுவாக கிரகங்களிலேயே மிகவும் அனைவராலும் பார்த்து பயப்படக்கூடிய ஒரு கிரகம் என்றால் அது சனி கிரகம் தான். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்க போகிறார் என்றால் அதனால் நல்லவைகளையும் தீயவைளையும் சேர்த்து அனுபவிக்கின்ற மனப்பக்குவத்திற்கு நாம் வரவேண்டும். கர்ம பலன்களை அளிக்கக்கூடிய சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு தவிர்க்க முடியாத சில தீயவைகள் நிகழ்ந்தாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. அதிர்ஷ்டமழையில் நனைய போகின்ற அந்த ஐந்து ராசிகாரர்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்கு இந்த 2024 வது வருடம் மிகவும் சிறப்பான வருடமாக அமையும். எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். திருமணமான தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் நல்ல லாபம் கிடைக்கும். சங்கராந்திக்கு பிறகு மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அது மட்டும் அல்லாமல் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். மொத்தத்தில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி

இந்த ஆண்டு உங்களுக்கு பல நாட்களாக கிடப்பில் கிடந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். சொத்து மற்றும் பதவி இழப்பு போன்றவற்றில் எந்த பயமும் தேவையில்லை நல்லதே நடக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும் குழந்தை பெறும் விரைவில் கிடைக்கும். நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த நல்ல வேலை கிடைக்கும் பதவியிலும் நல்ல உயர்வு கிடைக்கும். சங்கராந்திக்கு பிறகு இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரித்து மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் தீர்ந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்களுக்கு பணவரவு அதிகமாகி வாழ்க்கையும் அமோகமாக இருக்கும்.சிம்ம ராசிசனிபகவானின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை மற்றும் வேலையில் இடம் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இடம் மாற்றம் என வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்தவர்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் எங்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்களை கொண்டு வருவார் எனவே இந்த மாத இறுதிக்குள்ளேயே நீங்கள் கோடீஸ்வரராக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் இருந்து நல்ல செய்திகள் வரும். உங்கள் ராசிகள் சனிபகவான் சஞ்சரிப்பதால் நிறைய சிரமங்கள் கண்டிப்பாக வரும் ஆனால் அதே நேரத்தில் நல்லவைகளும் நடக்கும். அதற்கு நீங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். கும்ப ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பண வரவு அதிகமாகவே வந்து சேரும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற்று பண மழையில் நனைய போகும் நான்கு ராசிக்காரர்கள்!

Recipes AMP · Quick view
View full