சனியின் சஞ்சாரத்தால் சனியின் அருளை பெறும் 8 ராசிகள் இவைதான்!!!
சனி பகவான் (சனீஸ்வரன்) ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரி
சனி பகவான் (சனீஸ்வரன்) ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரின் ஆயுள் நீடிக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான். இவர் மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இவர் சூரிய தேவன் – சாயா தேவி தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். இவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது. ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும். இது குறித்து தெரிவித்துள்ள ஜோதிடர் பண்டிட் சுரேஷ் சாஸ்திரி, “தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். சனிக்கிழமை இரவு இந்த ராசியில் பிற்போக்குத்தனமாக இருக்கும் என்றும் நவம்பர் 15 வரை பிற்போக்குத்தனமாக செல்லும் என்றும் கூறினார். சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். அது என்னென்ன ராசிகள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப மகிழ்ச்சியுடன் செல்வச் செழிப்பும் உண்டாகும். அத்தகைய சூழ்நிலையில், வேலைக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சனியின் பிற்போக்கு இயக்கம் வணிகர்களுக்கு குறிப்பாக பலனளிக்கும். அவர்களின் தொழிலில் வளர்ச்சி காணப்படும். மொத்தத்தில் சனி பகவானை ராசி நாதனாக கொண்டவர்கள், இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் பெற்று வெற்றி பெறுவார்கள். பொருளாதார வளர்ச்சி சிறக்கும் மற்றும் நிலைமை வலுவடையும். வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். பொருளாதாரத் திட்டங்களில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வாங்கிய கடனைத் திரும்பப் பெறுவீர்கள், ஆனால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து தகராறும் முடிவுக்கு வரலாம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும்.
மிதுனம்
நிதி ஆதாயம் உண்டாகும். எங்காவது சிக்கிய பணம் திரும்பி வரும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவு நல்லப் பலனைத் தரும். எதைச் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் இதன் மூலம் பயனடைவீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருக்கவும். உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்
வேலையில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளை கவர்வதில் வெற்றி பெறுவீர்கள். காதலில் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். இந்த காலத்தில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வர இருக்கிறது. உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள்.
தனுசு
இந்த ராசிக்காரர்களின் முடிவடையாத வேலைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். பொறுமையாக உழைத்தால் அனைத்தும் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மகரம்
இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு விவகாரங்கள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உங்கள் எதிரிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி, அவர்களின் ஒவ்வொரு அசைவையும் எதிர்கொள்வதில் வெற்றிபெறுவீர்கள். மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
கும்பம்
இந்த ராசிக்காரர்களின் முடிக்கப்படாத வேலைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். குடும்பத்தில் செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது. பொறுமையாக உழைத்தால் அனைத்தும் நிறைவேறும்.
மீனம்
இந்த காலகட்டத்தில் உங்கள் எதிர்களை வெல்லும் வாய்ப்பு இருக்கும். எதிரிகளை உங்களை விட்டு விலகி விடுவார்கள். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். இந்த காலத்தில் எதிரிகளை ஓட விடுவீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும்.
இதனையும் படியுங்கள் : நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!