தொழிலில் உள்ள போட்டிகள் குறைந்து தொழில் வளம் சிறக்க சனிக்கிழமை வழிபாடு!!
தனக்கு தெரிந்த தொழிலை துவங்கி, சொந்த முயற்சியில் முன்னேறி பணம் சம்பாதிக்க வேண்டும் என தொழில் துவங்குகிறார்கள். தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும் சரி அனைவருக்கும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. கஷ்டப்பட்டு துவங்கிய
தனக்கு தெரிந்த தொழிலை துவங்கி, சொந்த முயற்சியில் முன்னேறி பணம் சம்பாதிக்க வேண்டும் என தொழில் துவங்குகிறார்கள். தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும் சரி அனைவருக்கும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. கஷ்டப்பட்டு துவங்கிய தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் அனைவருக்கு நினைப்பார்கள். ஆனால் அந்த முன்னேற்றம், லாபத்தை அனைவராலும் பெற முடிவதில்லை. தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தெய்வ வழிபாட்டின் மூலம் தீர்வு காண முடியும் என ஆன்றோர்கள் கூறுகின்றனர். அப்படி அதிக அளவில் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் பதிவில் பார்ப்போம்.
சனிக்கிழமை வழிபாடு
தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் சில எளிய தாந்த்ரீக பரிகாரங்களை மேற்கொள்வார்கள். ஆனாலும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தை நோக்கி நகராது. ஏனென்றால் ஒருவரின் தொழில் மற்றும் உத்தியோகத்தை நிர்ணயம் செய்வதில் சனி பகவானின் பங்கு அளப்பரியது. எவ்வளவு பரிகாரம் செய்தும் பயனடையாதவர்கள் தொழிலில் விருத்தி ஏற்பட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
சனிக்கிழமை வழிபாட்டு முறை
இந்த வழிபாடு செய்வதற்கு உங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து சனிக்கிழமை அன்று விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருந்து வாராகி அம்மன் ஆலயத்திற்கு சென்றால் மிகவும் சிறப்பு. அப்படி வாராகி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை 27 முறை வலம் வந்து தாமரைப்பூ மாலை சாற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் தொழிலில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. சனிக்கிழமை அன்று வாராகி அம்மனை மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து விரதம் இருந்து, அந்த தெய்வத்திற்குரிய கோவிலுக்குச் சென்று அந்த தெய்வத்திற்கு உகந்த மலரால் மாலை அணிவித்து 27 முறை வலம் வந்து அந்த தெய்வத்திற்குரிய பதிகம் பாடி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தால் தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறைந்து மென்மேலும் தொழில் வளம் சிறக்கும்.
இதனையும் படியுங்கள் : கடன் சுமை தீர செய்ய வேண்டிய தீப வழிபாடு!!