வார ராசிபலன் – 31 ஆகஸ்ட் 2025 முதல் 06 செப்டம்பர் 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 3, 4, 5 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் முயற்சிகளுக்கு ஏற்ற தன லாபம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் வண்டி வாகனங்களில் மெதுவாக செல்வது நல்லது. எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும

By ·

மேஷம் 

இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 3, 4, 5 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் முயற்சிகளுக்கு ஏற்ற தன லாபம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் வண்டி வாகனங்களில் மெதுவாக செல்வது நல்லது. எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில் போட்டிகள் குறையும். ரியல் எஸ்டேட் துறைகள் சிறப்பாக நடைபெறும்.ஊதிய உயர்வு, பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்கும்.‌ நண்பர்களின் உதவி கிடைக்கும். சிலர் அவசரப்பட்டு தவறான முடிவுகள் எடுத்துவிடும் அபாயம் உண்டு. தவறான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்து விஷயத்தில் குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் வரலாம். பொறுமையுடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டிய அவசியம்.

ரிஷபம் 

ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் 2, 3, 4 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் சம்பள உயர்வும், விரும்பிய இடமாற்றமும் பெறுவர். மாணவர்கள் புதிய ப்ராஜெக்ட்களில் நல்ல பெயர் பெறுவார்கள். சிலர் சுயதொழில் ஆரம்பிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்கள். அதற்கான வாய்ப்புகள் உண்டு. அரசாங்க உதவி மற்றும் வேலைவாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளால் அங்கீகாரமும் கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோக விஷயத்தில் சிலருக்கு பதவி உயர்வு உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்கள் உதவுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத விரோத மனப்பான்மை பகைமையைப் பெற்று தரும்.

மிதுனம் 

மிதுனம் ராசியினருக்கு இவ்வாரம் 1, 2, 3 ஆகிய இடங்களில் உள்ள சுபர்கள் பயணங்களால் நன்மை தருவார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி ஆதரவால் நன்மை அடைவர். மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெற முயற்சிகள் எடுப்பர். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்கள் புதிய பதவிகளைப் பெறுவார்கள்.‌ எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. திருமண வாழ்க்கையில் இனிமையான சூழல் நிலவும். காதலில் நம்பிக்கை அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் அணுகுமுறை சிக்கலைத் தந்துவிடும்.

கடகம் 

கடக ராசியினருக்கு இந்த வாரம் 1, 2-ம் இடங்களில் சுப கிரகங்கள் இருப்பதால் குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் எதிர்ப்புகளை சந்தித்தாலும் கடமையை சரியாக செய்து விடுவார்கள். மாணவர்கள் பொறியியல், கணினி மேற்படிப்பு குறித்து முடிவெடுப்பர். நீண்ட காலமாக தேங்கி கிடந்த வேலைகளை முடிக்க முடியும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை படைக்க முடியும். போட்டித் தேர்வுகளில் வெற்றியைப் பெற்றுத் தரும். தொழிலிலும் வேலைவாய்ப்பிலும் போட்டியைச் சமாளித்து முன்னேறும் ஆற்றல் கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை தேடும் வாய்ப்பினைப் பெற்றுத் தரும். கடன்களில் ஒரு பகுதி அடைபடும் வாய்ப்புண்டு. 

சிம்மம் 

சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் ஆட்சிபெற்ற ராசியதிபதி மனதில் ஆன்மிக எண்ணங்களை தருவார். மாணவியர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை புரிந்து கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்புகள் கூடும். பொருளாதார சிக்கல் இல்லாத வாரமாகவே இந்த வாரம் போகும் வாய்ப்பு அதிகம். எத்தனைச் சங்கடங்கள் வந்தாலும் அவைகள் உங்கள் சுய முயற்சியால் தீர்ந்துவிடும். கல்வி போட்டி தேர்வு, விளையாட்டு போட்டிக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாக அமையும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வெளியூரிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். சிலருக்கு கடுமையான பேச்சுக்களால் துன்பங்கள் வரலாம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

கன்னி 

இந்த வாரம் கன்னி ராசியினருக்கு 10, 11-ம் இடங்களில் உள்ள சுபர்கள் தொடங்கிய காரியங்களில் வெற்றி தருவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு பெயர் பெறுவர்.‌ முதலீடு செய்வதில் கவனம் தேவை. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றியடைவர். பெரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடினமான வேலைகளை எளிதாக முடிக்க முடியும். வணிகத்தில் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் மூலம் உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல்களையும் பிரயாணங்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். வண்டிகளில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் வேண்டும்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு இவ்வாரம் 9, 10-ம் இடங்களில் உள்ள சுபர்கள் உங்களது சமூக முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்வு, மதிப்பு உண்டு. மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதல் மூலம் உயர் கல்விக்கு அப்ளை செய்வர். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பம் ஏற்படும். திருமணம் முதலிய சுப காரியங்களில் உள்ள தடை அகலும். புதிய தொழில்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு உண்டு. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பூர்வீக சொத்து தகராறுகள் நீடிக்கும். திடீர் திடீரென்று கோபம் ஏற்பட்டு உணர்ச்சி வசப்படுவீர்கள்.

விருச்சிகம் 

விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் 10-ல் உள்ள சூரியன் சமூக மதிப்பை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் பணப்புழக்கம் ஏற்பட்டு தொழில் விருத்தி பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உரிய அங்கீகாரம் பெறுவர். மாணவர்கள் எதிர்கால நலனுக்கேற்ற புதிய தொழில்நுட்பங்களை கற்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.‌ புதிதாக மனை வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்றமான காலமாக அமையும்.‌ குடும்பத்தில் எதிர்பார்த்த சுபகாரியப் பேச்சுக்கள் நல்லபடியாக முடியும். முக்கிய நபர்களின் ஆதரவும் அரவணைப்பும் உண்டு. புதிதாக வண்டி வாங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தாய்வழிச் சொந்தங்களோடு கருத்து வேறுபாடுகள் வரலாம். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை தேவை.

தனுசு 

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் 7, 8, 9-ல் உள்ள சுபர்கள் நண்பர்கள் மூலம் நன்மை தருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. மாணவர்கள் வெளியூர் சென்று தொழிற்பயிற்சி பெறுவார்கள். தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல உயர்வு உண்டு. பெண்களாலும் ஆதாயம் உண்டு. அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்‌. மனைவி வழியில் தன வரவு உண்டு. கலைஞர்களுக்கு ஆதாயமான வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டு. மனைவி வழியில் அல்லது கணவன் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்ப பிரச்னைகளில் தேவையில்லாத தலையீடுகள் வரலாம். பிறர் விஷயங்களில் நீங்களாகப் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்.‌

மகரம் 

மகரம் ராசியினருக்கு இந்த வாரம் 7-ம் இடத்தில் உள்ள சுக்கிரன் பெண் நண்பர்கள் மூலம் பல நன்மைகளை தருவார். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் நற்செய்தி கிடைக்கப் பெறுவர். கடினமான உழைப்பு மற்றும் நம்பிக்கையால் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். இந்த வாரத்தில் மனம் அமைதியாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பர். ஆடை ஆபரணத் தொழில்கள் வளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணவரவு கிடைக்கும். அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகள் நல்லபடியாக முடியும். தவறான செய்திகளை நிஜம் என்று நம்பி மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கும்பம் 

இந்த வாரம் கும்பம் ராசியினருக்கு 5, 7-ம் இடத்தில் உள்ள சுபர்கள் நீண்ட காலமாக இழுத்தடித்த நல்ல விஷயங்களை நடத்தி வைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் துணிச்சலாக செயல்பட்டு சாதனை புரிவார்கள். மாணவர்கள் உள்லரங்க விளையாட்டில் சாதனை செய்வர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு துன்பங்கள் குறையும். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும். கடினமான வேலைகளை எளிதாக முடிக்க முடியும். உங்களின் நிலைமையில் உள்ள வேலைகளை திட்டமிட்டு செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியும். பெரியோர்களின் ஆசிகளும் தெய்வத்தின் ஆசியும் துணையாக நின்று சிக்கல்களில் இருந்து விடுவிக்கும். வாகனங்களில் செல்லும்போது சிறு விபத்துக்கள் நேரலாம் கவனமாக இருக்கவும்.

மீனம்

மீனம் ராசியினருக்கு இந்த வாரம் 4, 5-ல் அமர்ந்துள்ள சுபர்கள் வீடு, மனை, வண்டி வாகனம், சுற்றுலா யோகத்தை தருவார்கள். ஏற்றுமதி வியாபாரிகளுக்கு ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணி மாற்றமோ, சம்பள உயர்வோ பெறுவர். மாணவர்கள் வெளிநாட்டு பணி, பொறியியல் பணி வாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவர். அரசாங்க உதவிகளைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வணிகத்தில் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். சிலருக்கு புதிய முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறவுகளில் தப்பான பேச்சு வார்த்தைகளால் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

இதனையும் படியுங்கள் : ஆவணி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!!

Recipes AMP · Quick view
View full