செப்டம்பர் மாதம் நிகழும் கிரக பெயர்ச்சியால் பொருளாதார வெற்றி பெற போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏ

By ·

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏற்படுத்தக் கூடும். செப்டம்பர் 04 புதன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். செப்டம்பர் 16 சூரியன் கன்னி ராசியிலும், செப்டம்பர் 18 சுக்கிரன் துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்.

இதற்குப் பிறகு, செப்டம்பர் இறுதியில், அதாவது செப்டம்பர் 23 புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த செப்டம்பர் மாதம் புதன், சூரியன், சுக்கிரன் தங்களின் ராசிகளை மாற்றப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும். அதனுடன் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே செப்டம்பர் கிரகப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் வெற்றி பெறலாம். உத்யோகஸ்தர்கள் வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். வியாபாரிகள் அதிகமான விற்பனை கூடி தங்களுக்கு நல்ல லாபத்தை தாங்கள் எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவீர்கள். நிலம், கட்டிடம் போன்றவற்றில் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்கு இந்த கிரகப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும். கடினமான உழைபின் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பரின் உதவியால் சிரமங்களில் இருந்து மீள்வீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். வேலை மாற்றம் ஏற்படும். நல்ல வருமானம் உயரும். பழைய முதலீடு மூலம் நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்காக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். பணியிடமாக இருந்தாலும் சரி, அரசியல் துறையாக இருந்தாலும் சரி, உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் கிரகங்களின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். பொருளாதாரத் துறையில் வளர்ச்சி இருக்கும். முதலீடு மூலம் நன்மை பெறலாம். உத்யோகஸ்தர்கள் நீங்கள் எதிர்பார்த்த தொகை மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்தில் தங்களுக்கு வேலை கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் நிலம், கட்டிடங்கள் அல்லது வாகனங்கள் வாங்க அல்லது விற்க திட்டமிடலாம்.

இதனையும் படியுங்கள் : சிவனை எந்த கிழமையில், எந்த நேரத்தில் வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை