வார ராசிபலன் 14 செப்டம்பர் 2025 முதல் 20 செப்டம்பர் 2025 வரை!!
மேஷம் மேஷ ராசியினர் மனதில் இந்த வாரம் புதிய தெளிவு ஏற்படும். இல்லத்தரசிகள் மனதில் நினைத்த சுப காரியங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த தடைகள் விலகும்.மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். பகை குறையும். தொழிலில் புதுப்
மேஷம்
மேஷ ராசியினர் மனதில் இந்த வாரம் புதிய தெளிவு ஏற்படும். இல்லத்தரசிகள் மனதில் நினைத்த சுப காரியங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த தடைகள் விலகும்.மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். பகை குறையும். தொழிலில் புதுப்பாதை தெரியும். வெளிநாட்டு முயற்சிகள் பலிக்கும். கலைஞர்களுக்கு யோகம் உண்டு. ஆரோக்கியத்தை அதிகரித்து மருத்துவச் செலவுகள் குறையும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு சாதகமாக பலன்கள் கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற மனக்கவலைகள் அதிகரிக்கலாம். ஒப்பந்தங்கள் சில கைநழுவிப் போகலாம் கவனத்தோடு இருக்க வேண்டும். பெண்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ரிஷபம்
இந்த வாரம் ரிஷப ராசியினர் புதிய பயணங்களை மேற்கொண்டு காரிய வெற்றி அடைவர். குடும்பத்தில் தடைபட்ட திருமண விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாறுதல், ஊதிய உயர்வு உண்டு. மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆசிகளை பெறுவது எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும். புதிய தொழில்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் பயணங்களால் பலன் உண்டு. கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். ஆலய வழிபாட்டுக்கு வாய்ப்புண்டு. வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்புண்டு. தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் சில பிரச்னைகள் வரலாம். வம்பு வழக்குகள் வரும். கவனமாகக் கையாளா விட்டால் சிக்கல் தான்.
மிதுனம்
மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் அரசு உதவிகள் கிடைக்கும். பணி புரியும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு உண்டு. உத்தியோகஸ்தர்கள் சங்கடங்களை சந்தித்து, அதன் மூலம் ஆதாயம் பெறுவர். வெளிநாட்டு பணி குறித்த தகவல்களை மாணவர்கள் பெறுவர். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளம் பெருகும். வெளியூர் பயணங்களால் பலன் உண்டு. கலைஞர்களுக்கு சிறந்த நன்மை கிடைக்கும். உபரி வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. பேச்சுக்களில் கவனம் தேவை. எதிர்மறை விமர்சனங்களைக் குறித்து கவலைப்பட வேண்டாம். காரிய தாமதம் ஏற்படும். எதிலும் பொறுமையும் கவனமும் தேவை.
கடகம்
கடகம் ராசியினரின் தோற்றம் இந்த வாரம் புதிய பொலிவோடு இருக்கும். உறவினர்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று இல்லத்தரசிகள் மகிழ்வர். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட பொறுப்பு அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் பெறுவார்கள். வீடு வாங்குதல் விற்றல் வகையில் பணவரவு உண்டு. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வாகன யோகங்கள், நண்பர்களால் உதவி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உண்டு. பணம் விரயமாகும் பூர்வீகச் சொத்துக்களில் பிரச்னை உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பத்திரப் பதிவுகளில் கவனம் தேவை. சில விஷயங்களில் மந்தநிலை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியினர், இந்த வாரம் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வார்கள். பணிபுரியும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு உண்டு. புதிய முதலீடுகளைச் சிறிது காலம் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்பட்டு கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த சிக்கல்கள் விலகும். மாமன் உறவுகள் மகிழ்ச்சி தரும். கல்வி முயற்சிகள் பலிக்கும். பொது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். கணவன் மனைவி அன்புடன் இருப்பார்கள். வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வு ஏற்றமாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார்த்தைகளில் கவனம் அவசியம். அவசர முடிவுகள் சங்கடத்தை தரும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இவ்வாரம் மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். இல்லத்தரசிகள் மனதில் இருந்த சங்கடங்கள் அகலும். உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனித்திறனை வெளிக்காட்டுவர். புதிய வாய்ப்பு வீட்டுக்கதவை தட்டும். மாணவர்கள் இரவில் வெளியிடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபச் செலவுகள் உண்டு. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சில விஷயங்களில் பணம் விரயமாகும். வீடு மாற்றம், ஊர்மாற்றம் உண்டு. வண்டி வாகனங்களில் பழுதுகள் ஏற்படலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியினர், இவ்வாரம் சமூகம், சொந்த பந்தம் இடையே நல்ல மதிப்பு பெறுவர். இல்லத்தரசிகள் கைகளில் பணம் புரளும். புதிய இயந்திரங்களை வாங்கலாம். உத்தியோகஸ்தர்கள் அவரவர் நிலைக்கு ஏற்ப பணி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் அரசாங்க உதவித்தொகை, அரசு ஆதரவு மூலம் நன்மை பெறுவர். கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், கட்டுக்குள் இருக்கும். மறைமுகமான சில நன்மைகள் உங்களைத் தேடி வரும். அரசாங்க அனுகூலங்கள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு மனதில் இனம் புரியாத கவலை இருக்கும். ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் மதிப்பு மரியாதை உயரும். அரசு பணிகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு பணி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடைய ஆதரவு பெற்று சிறப்பாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. ஏதோ ஒரு வகையில் வருமானம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் கௌரவம் கிடைக்கும். தொழில் விஸ்தரிப்புப் பணிகளில் ஈடுபடுவீர்கள். புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு சில பிரச்னைகள் வருவதைத் தவிர்க்க முடியாது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசியினர் இந்த வாரம் புதிய விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிக்காட்டுவார்கள். பணிபுரியும் இல்லத்தரசிகளுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். தலைமை பொறுப்பில் உள்ள உத்தியோகஸ்தர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமடைவர். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் உண்டு. பொதுவாழ்வில் மதிப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். முதலீடுகள் செய்யும் பொழுது கவனத்தோடு செய்ய வேண்டும். தந்தை மகன் கருத்துவேறுபாடுகள் வரலாம். வீடுமனை பத்திரப்பதிவுகளில் கவனம் தேவை.
மகரம்
மகர ராசியினர் இவ்வாரம் புதியவற்றை செய்து புகழ் பெறுவர். இல்லத்தரசிகள், பணிபுரியும் பெண்மணிகள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வர். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளில் திறமையாக செயல்படுவர். மாணவர்கள் எதிர்கால பணி குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீடு மனை போன்ற விஷயங்களில் திருப்தி இருக்கும். வீட்டை பழுது பார்க்கும் பணி வெற்றிகரமாக நிறைவேறும். வீட்டில்மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புண்டு. மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழில் விஸ்தரிப்பு விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது தாமதமாகும். யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தர வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். இல்லத்தில் மங்கல இசை, மழலை ஒலி கேட்கும். பணம் வரவு தாமதம் ஆகும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க பெறுவர். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் திறமை காட்டுவார்கள். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் விலகும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில்புத்துணர்ச்சியை உணரும் வாரமாக அமையும். தொழில் வியாபாரம் புதிய திருப்பத்தைப் பெறும். திடீர் பணவரவு உண்டு. முக்கியஸ்தர்கள் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறைகளுக்கு பிரகாசமான வாய்ப்புண்டு. வீடு மனை வாங்கும் யோகமும் உண்டு. பதற்றத்தால் காரியம் தாமதமாகும். பெண்களால் பிரச்னை உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த வாரம் சுப காரிய தடை விலகும். இல்லத்தரசிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சீராகும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்வியில் தனித்திறன்களை வெளிக்காட்டி பாராட்டு பெறுவர். பணத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் பூர்த்தியாகும். பூமி லாபம் கிடைக்கும். கட்டிய வீடு பழுது பார்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சுகமாக இருக்கும். பதவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைக்கவும் வழி உண்டு. சிலருக்கு முயற்சிகளில் தாமதங்கள் வரலாம். வீண் விரயங்கள் ஏற்படலாம். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சிம்ம ராசியில் பெயர்ச்சியாகும் புதனால் இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!