2025-ல் சனி பெயரச்சியால் பெரும் விளைவுகளை சந்திக்க போகும் ராசிகள் இவர்கள் தான்!!
ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள்
ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். சனி கொடுக்க எவர் தடுப்பார், சனி தடுக்க எவர் கொடுப்பார் என்ற சொற்றொடர்க்கு ஏற்றவாறு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ராசியின் ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி சஞ்சரிக்கும் போது அந்த ராசியின் ஏழரை சனி ஆரம்பமாகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றும் போது சில ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஏழரை சனி தொடங்கவுள்ள ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
அடுத்த ஆண்டு நிகழவுள்ள சனிபெயர்ச்சியால், சனி பகவானின் சொந்த ராசியான கும்பத்திற்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்குகிறது. இதனால், பணப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். கடின உழைப்பின் பலனைப் பெற முடியாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு சுபகாரியங்கள் சற்று தாமதமாக நடைபெறலாம். புதிய முயற்சிகள், புதிய கடன்களை வாங்க வேண்டாம். அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மேஷம்
மீன ராசியில் சனி பெயர்ச்சி காரணமாக மேஷ ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். இதனால், பொருளாதார நிலை மோசமடையலாம். வருமானம் குறையும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால், சனியின் தாக்கம் அவ்வளவு தீவிரமாக இருக்காது. ஆனால் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிலம் வாங்கும் போது கவனம் தேவை, சிலர் வம்பு, வழக்குகளில் சிக்கி உள்ள சொத்துக்களை வாங்கி சிக்கல்களை சந்திக்கலாம்.
மீனம்
மீன ராசியில் சனி இடப்பெயர்ச்சி அடையும் நிலையில் மீன ராசியினருக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நிதி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருக்கும். உடல்நலம் மோசமடையலாம். மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் மிக கவனமாக இருக்க வேண்டும், முறையான ஆலோசனை மற்றும் தெளிவு இல்லாமல் முதலீடுகளை செய்யக்கூடாது. திருமண வரன்களை பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சியால் கெடு பலன்களை சந்திக்க உள்ள ராசிகள்!!