Advertisement
சைவம்

ருசியான ஷாஹி பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க!

Advertisement

ஷாஹி என்பது ஹிந்தியில் ராயல் என்று பொருள்படும், அதாவது ஷாஹி பனீர் என்பது முகலாய் சமையலில் இருந்து ஒரு ராயல் பனீர் செய்முறையாகும். இந்த செய்முறையில் தயிர், கொட்டைகள் மற்றும் காய்கறிகளின் சரியான கலவையால் ராயல் டச் சேர்க்கப்பட்டுள்ளது. ஷாஹி பனீர் என்பது தக்காளி அடிப்படையிலான கிரேவியில் பனீர் சேர்த்து கிரீம், வெண்ணெய் சேர்த்து செழுமையாகவும் சுவையாகவும் இருக்கும்! இது வரவேற்கத்தக்க மாற்றம் மற்றும் எளிமையான பொருட்களுடன் இருப்பது.

ஷாஹி பனீர் | Shahi Paneer Recipe in Tamil

Print Recipe
ஷாஹி என்பது ஹிந்தியில் ராயல் என்று பொருள்படும், அதாவது ஷாஹி பனீர் என்பது முகலாய் சமையலில் இருந்து ஒரு ராயல் பனீர் செய்முறையாகும். இந்த செய்முறையில் தயிர், கொட்டைகள் மற்றும் காய்கறிகளின் சரியான கலவையால் ராயல் டச் சேர்க்கப்பட்டுள்ளது. ஷாஹி பனீர் என்பது தக்காளி அடிப்படையிலான கிரேவியில் பனீர் சேர்த்து கிரீம், வெண்ணெய் சேர்த்து செழுமையாகவும் சுவையாகவும் இருக்கும்!
Course Breakfast, dinner
Cuisine Indian, punjabi
Keyword Paneer Gravy
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 280

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 400 கிராம் பன்னீர்
  • 200 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 150 கிராம் தக்காளி நறுக்கியது
  • 8 ஏலக்காய்      
  • 4 பட்டை 
  • 8 இலவங்கம்
  • 2 பிரியாணி
  • 2 கருப்பு ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் சீரகம் 
  • 2 டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • 16 முந்திரி
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா 
  • 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் கசூரி மேத்தி
  • 1/4 கப் ப்ரஷ் க்ரீம்
  • உப்பு                              தேவையானஅளவு
  • கொத்தமல்லி இலை சிறிதளவு

Instructions

  • ஒரு வாணலியில் 2டேபிள்
    Advertisement
    ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தயிருடன் காஷ்மீரி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  • வெங்காயம் சிவக்க வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, தயிர் கலவையை ஊற்றி கலந்து, எண்ணெய் பிரிந்ததும், தக்காளி, முந்திரி சேர்த்து வதக்கவும்.
  • இதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
  • இதனுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட்டு நைசாக அரைத்து வடிகட்டி வைக்கவும்.
  • ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சர்க்கரை சேர்த்து சர்க்கரை சிவந்ததும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
  • கெட்டியானதும், கரம் மசாலா தூள், கசூரிமேத்தி, பனீரை சேர்த்து மூடி 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
  • பின்னர் ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
  • சூப்பரான ஷாஹி பனீர் மசாலா ரெடி. சப்பாத்தி, நான், புல்கா,பரோட்டா வுடன் சூப்பராக இருக்கும்.

Nutrition

Serving: 600g | Calories: 280kcal | Carbohydrates: 5g | Protein: 16g | Fat: 22g | Saturated Fat: 14.95g | Calcium: 633mg

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

53 நிமிடங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

11 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

14 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

22 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago