பேபி பொட்டேட்டோ ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரா செஞ்சு பாருங்க!!

உருளைக்கிழங்கு பொதுவாக எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு காய்கறி. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே உருளைக்கிழங்கு ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. உருளைக்கிழங்கு வச்சு உருளைக்கிழங்கு கட்லெட், உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு கூட்டு, உருளைக்கிழங்கு க

By Prem Kumar · 10/7/2025

உருளைக்கிழங்கு பொதுவாக எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு காய்கறி. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே உருளைக்கிழங்கு ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. உருளைக்கிழங்கு வச்சு உருளைக்கிழங்கு கட்லெட், உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு கூட்டு, உருளைக்கிழங்கு குருமா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம். சுண்டல், பட்டாணி குழம்பு எப்படி ஏதாவது ஒன்னு செஞ்சா அது கூட இந்த உருளைக்கிழங்கு போட்டு செய்யும் போது சுவை இன்னும் அருமையா இருக்கும்.

ஒரு சிலர் அவங்க வீட்ல மட்டன் குழம்பு செய்யும் போது அது கூட உருளைக்கிழங்கு போட்டு தான் மட்டன் குழம்பு வைப்பாங்க. அது நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா கூட இருக்கும். லெமன் சாதம் தயிர் சாதம் இது எல்லாத்துக்கும் காமினேஷனா இருக்க மாதிரி உருளைக்கிழங்கு ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அதே மாதிரி இன்னைக்கு நம்ம பேபி பொட்டேட்டோ வச்சு ஒரு சூப்பரான பிரை செய்ய போறோம். இது பாக்கும்போதே நாக்கில் எச்சில் வரும் அந்த அளவுக்கு டேஸ்ட்டாவும் இருக்கும் பாக்குறதுக்கும் சூப்பரா இருக்கும் இதுக்கு நம்ம பிரஷ்ஷா ஒரு மசாலா வச்சு செய்யப் போறோம்.

கடலைப்பருப்பு உளுந்து பருப்பு காய்ந்த மிளகாய் இதெல்லாம் சேர்த்து இன்னும் கொஞ்சம் மசாலாக்கள் சேர்த்து பிரெஷ்ஷா வறுத்து அரைச்சு செய்யும் போது டேஸ்ட் ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி வீட்டுல செய்வீங்க. ரசம் சாதம் வச்சு கூடவே தொட்டுக்க இந்த மாதிரி ஒரு ஃப்ரை செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும். வெளியில நல்லா கிரிஸ்பியா உள்ள சாஃப்டா மசாலாவுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான பேபி பொட்டேட்டோ பிரை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு சீஸ் சாண்ட்விச்

Recipes AMP · Quick view
View full