முட்டைக்கோஸ் சாதம் குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த மாதிரி செஞ்சு கொடுங்க!!

ஒரு சில பேருக்கு முட்டைகோஸ் சுத்தமா பிடிக்காது முட்டைகோஸ் பொரியல், முட்டைக்கோஸ் கூட்டு எது செஞ்சாலும் விரும்ப மாட்டாங்க. அந்த மாதிரி முட்டைகோஸ் சுத்தமா பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான முட்டைக்கோஸ் சாதம் செஞ்சு கொடுங்க. பெரும்பாலும் வீட்ல பிரைட் ரைஸ் செய்தால் முட்டைக்

By Prem Kumar · 22/7/2025

ஒரு சில பேருக்கு முட்டைகோஸ் சுத்தமா பிடிக்காது முட்டைகோஸ் பொரியல், முட்டைக்கோஸ் கூட்டு எது செஞ்சாலும் விரும்ப மாட்டாங்க. அந்த மாதிரி முட்டைகோஸ் சுத்தமா பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான முட்டைக்கோஸ் சாதம் செஞ்சு கொடுங்க. பெரும்பாலும் வீட்ல பிரைட் ரைஸ் செய்தால் முட்டைக்கோஸ் சேர்த்துதான் செய்வோம் ஆனா அதுல மிகவும் குறைவான அளவில் தான் சேர்ப்போம். முட்டைக்கோஸ் மட்டும் சேர்த்து இது சூப்பரான முட்டைக்கோஸ் சாதம் லஞ்சுக்கு செஞ்சு பாருங்க குழந்தைகள் மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க.

இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது. கேரட் சாதம் பீட்ரூட் சாதம், முட்டை சாதம் அப்படின்னு பல வகையான சாதங்கள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த முட்டைக்கோஸ் சாதம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி ட்ரை பண்ணுவீங்க. அதனால மறக்காம உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கு இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு கொடுங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாம வேலைக்கு போறவங்களுக்கும் காலேஜ் போறவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம்.

இதுல மிளகுத்தூள் சேர்த்து செய்றதால சளி இருமல் இருந்தா கூட சரியாகிவிடும் அதனால கண்டிப்பா இந்த மாதிரி ரெசிபிஸ் செஞ்சு பாருங்க. இதுல உங்களுக்கு தேவைப்பட்டா முட்டை கூட சேர்த்துக் கொள்ளலாம் டேஸ்ட் சூப்பராக இருக்கும். இந்த முட்டைகோஸ் சாதத்தில் கேரட் கூட கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரட் இல்லை என்றால் வெறும் முட்டைக்கோஸ் மட்டும் சேர்த்து இந்த சூப்பரான ரெசிபியை செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான முட்டைகோஸ் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான முட்டைக்கோஸ் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க?

Recipes AMP · Quick view
View full