சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கருவேப்பிலை தொக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!

கருவேப்பிலை சாப்பிடுவது உடம்புக்கு அவ்வளவு நல்லது. கருவேப்பிலை சாப்பிடும்போது முகம் ரொம்பவே அழகாக மாறும் முடி நல்லா கருமையா வளரும். அதுமட்டுமில்லாமல் கருவேப்பிலையும் நிறைய இரும்புச் சத்துக்கள் இருக்கிறதால இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறவங்க இதை அடிக்கடி சாப்பிடணும் ஆனா எல்லா சாப

By ·

கருவேப்பிலை சாப்பிடுவது உடம்புக்கு அவ்வளவு நல்லது. கருவேப்பிலை சாப்பிடும்போது முகம் ரொம்பவே அழகாக மாறும் முடி நல்லா கருமையா வளரும். அதுமட்டுமில்லாமல் கருவேப்பிலையும் நிறைய இரும்புச் சத்துக்கள் இருக்கிறதால இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறவங்க இதை அடிக்கடி சாப்பிடணும் ஆனா எல்லா சாப்பாட்டிலும் நம்ம கருவேப்பிலையை போட்டு தாளிச்சாலும் இதை ஒதுக்கி வச்சிட்டு தான் சாப்பிடுவோம் ஆனா ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடக்கூடாது ஆனா ஒரு சிலர் அப்படித்தான் பண்ணுவாங்க அவங்களுக்காகவே இந்த சூப்பரான கருவேப்பிலை தொக்கு ஒரு தடவை செஞ்சு பாருங்க.

இதுக்கு நம்ம கருவேப்பிலை பொடி அரைச்சு அதுல தொக்கு செய்யணும் அப்படி செஞ்சு சாப்பிடும் போது இதில் இருக்கிற எந்த சத்துக்களையும் வீணாகாமல் அதோட முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும். இந்த கருவேப்பிலை தொக்கு சாப்பிடுறதுக்கும் ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும்.குழந்தைகளுடைய லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த அருமையான கருவேப்பிலை தொக்கு செஞ்சு சாதத்தில் போட்டு பிசைந்து கொடுத்து விடுங்க. கண்டிப்பா சாப்பிட்டுவிட்டு டிபன் பாக்ஸை காலியாக்கி தான் கொண்டு வருவாங்க.

கருவேப்பிலையில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஹீமோகுளோபின் குறைபாட்டை கூட சரி செய்யும். அதனால வாரத்துக்கு ரெண்டு தடவையாவது இந்த மாதிரி கருவேப்பிலை சட்னி, கருவேப்பிலை தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக கருவேப்பிலை சாப்பிடணும். இந்த கருவேப்பிலை தொக்கை நம்ம நல்லெண்ணெயில் செய்றதால சுவை கூடுதலாக இருக்கும் மேலும் சுவை மட்டுமல்லாமல் இந்த கருவேப்பிலை தொக்கை நம்ம ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிட்ஜில் வைத்து ஸ்டோர் பண்ணி சாப்பிடலாம். கண்டிப்பா கெட்டுப் போகாது. நல்லெண்ணெய் கொஞ்சம் சேர்த்து விட்டு செய்யணும். இப்ப வாங்க இந்த சுவையான கருவேப்பிலை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : லஞ்ச் பாக்ஸ்க்கு கறிவேப்பிலை சாதத்தை இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க டிபன் பாக்ஸில் ஒரு பருக்கை சாதம் கூட மீதம் இருக்காது!

Recipes AMP · Quick view
View full