சிறப்பான வாழ்க்கை அமைய ஏற்ற வேண்டிய சில தீபங்கள்!!

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பலவிதமான கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும். இதற்கு முக்கியமான காரணமாக பல காரணங்கள் இருந்தாலும் ஜாதக ரீதியாக வரக்கூடிய நவக்கிரகங்களும் ஒரு முக்கிய காரணம். கர்ம வினைகளின் அடிப்படையில் தான் இவை செயல்படுகிறது நவகிரகங்களின் பாதிப்புகள் குறைவதற்கு ஆன்மீக

By Prem Kumar · 5/9/2025

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பலவிதமான கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும். இதற்கு முக்கியமான காரணமாக பல காரணங்கள் இருந்தாலும் ஜாதக ரீதியாக வரக்கூடிய நவக்கிரகங்களும் ஒரு முக்கிய காரணம். கர்ம வினைகளின் அடிப்படையில் தான் இவை செயல்படுகிறது நவகிரகங்களின் பாதிப்புகள் குறைவதற்கு ஆன்மீக ரீதியாக பல வழிகள் உள்ளது. இந்த நவகிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் கொண்டு வரும் மோசமான சில விஷயங்களையும் கொண்டு வரும். ஆற்றல் மிகுந்த நவக்கிரகங்களை நாம் வழிபாடு செய்ய வேண்டும் இந்த முறையில் தீபம் ஏற்றி நவகிரங்களை வழிபாடு செய்தால் நிச்சயமாக வாழ்க்கையில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளும் கஷ்டங்களும் தடைகளும் நீங்கும்‌. தீபம் ஏற்றும் வழிமுறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

பௌர்ணமி நாள்

பேராற்றல் அதிகமாக திகழக்கூடிய பௌர்ணமி நாள் மிகவும் முக்கியமானது. மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த பௌர்ணமி நாளன்று நிலவு பிரகாசமுடன் இருக்கும் நாள். அன்று பலவிதமான வழிபாடுகளை நாம் செய்திருப்போம் அன்றைய தினத்தில் சிவபெருமானின் ஆலயத்தை சுற்றி கிரிவலம் வருவார்கள் ஒரு சிலர் முருகப்பெருமானுக்கு கிரிவலம் வருவார்கள். மேலும் பெண் தெய்வ வழிபாட்டிற்கும் சிறந்த நாள் சத்தியநாராயண பூஜை நடைபெறும். மேலும் மகாலட்சுமி மற்றும் குபேரவை வழிபாடு செய்வதற்கும் சிறப்பான நாளாக அமையும். இப்படி பலவிதமான வழிபாடுகளில் பௌர்ணமி நாள் என்று செய்வது வழக்கமாக இருக்கும். அதோடு சேர்த்து நவகிரகங்களுக்கு ஏற்று கூறிய தீபத்தையும் பௌர்ணமி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானது.

நவகிரக தீபங்கள்

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி நாள் என்று வீட்டு பூஜை அறையில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும் 9 தொன்னைகளை வாங்கி வரிசையாக ஒரே நேர்கோட்டில் வைத்து நவகிரகங்களுக்கான தானியங்களை அது சேர்க்க வேண்டும். கோதுமை, நெல், பச்சை பயிறு,துவரம் பருப்பு, கருப்பு கொண்டை கடலை, வெள்ளை மொச்சை, கருப்பு எள், கருப்பு உளுந்து, கொள்ளு போன்ற ஒன்பது வகையான தானியங்களையும் வாங்கி ஒவ்வொரு தொன்னைகளிலும் ஒரு கைப்பிடி அளவு போட வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு அகல் விளக்கு வைத்து நெய் அல்லது இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களில் ஏதாவது ஒரு எண்ணையை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு கிரகங்களுக்கும் உகந்த நிறத்தில் திரியை தயார் செய்து அதை வைத்த தீபம் ஏற்றினால் பல மடங்கு பலன் கிடைக்கும். ஒவ்வொரு தீபமும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் எரிய வேண்டும் பௌர்ணமி நாளன்று நவகிரக தானியங்களை வைத்து தீபம் ஏற்றி மனதார வழிபாடு செய்தால் நவக்கிரகங்களின் அருள் பரிபூரணமாக கிடைத்து வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் படிப்படியாக குறையும். இந்த எளிமையான தீப வழிபாட்டை முழு மனதோடு செய்து அதற்கான பலன்களை பெறுங்கள்.

இதனையும் படியுங்கள் : கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் தீர உதவும் கோ தானம்!!

Recipes AMP · Quick view
View full