அவசியம் வாரம் ஒரு ருசியான சிறுகீரை சாம்பார் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
சாம்பார் குழம்பு தான் தமிழ்நாட்டின் முக்கிய உணவு. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். அந்த வகையில் சற்று வித்தியாசமாக கீரை சாம்பார் செய்யலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கீரை. வாரம் ஒருமு
சாம்பார் குழம்பு தான் தமிழ்நாட்டின் முக்கிய உணவு. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். அந்த வகையில் சற்று வித்தியாசமாக கீரை சாம்பார் செய்யலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கீரை. வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான வெந்தயக் கீரை சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!!
கீரையை பொரியல், கூட்டு, கடையல், சாம்பார் என்று பலவாறு நாம் நமது உணவில் சேர்க்கலாம். அதில் கீரை சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இம்மாதிரியான கீரை சாம்பார் அடிக்கடி செய்வது குழந்தைகளுக்கு நல்லது. கீரை பொரியல், மசியல் பிடிக்காதவர்கள் கூட வீட்டில் கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.