- Advertisement -
வெந்தயக் கீரை சாதம் , சுவையான மற்றும் பாரம்பரியமான ஒரு உணவு. வெந்தக்கீரை கென்றே ஒரு சுவையும் மனமும் உண்டு அதில் சாதம் செய்தல் நிறைந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.வெந்தயகீரைக்கு இயற்கையாக வே ஒரு கசப்பு தன்மை உண்டு அது இந்த சமையல் சமைக்கும் பொது மற்ற சுவையுடன் சேர்ந்து கசப்புத்தன்மை குறைந்து சுவை மிகுந்த ஒரு
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்படி சுட சுட செய்து பாருங்கள்!
- Advertisement -
கலவை சாதம் நமக்கு கிடைக்கும் வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது.வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. வாங்க இந்த வெந்தயக் கீரை சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
வெந்தயக் கீரை சாதம் | Methi Rice Recipe In Tamil
வெந்தயக் கீரை சாதம் , சுவையான மற்றும் பாரம்பரியமான ஒரு உணவு. வெந்தயக்கீரைகென்றே ஒரு சுவையும் மனமும் உண்டு அதில் சாதம் செய்தால் நிறைந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் உங்களுக்குகிடைக்கும்
Yield: 4 people
Calories: 49kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு கீரை
- 4 மிளகாய் வற்றல்
- 4 ஸ்பூன் கடலை பருப்பு
- 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் தனியா
- 5 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- சிறியது தேங்காய் கீற்று தேவையானால்
செய்முறை
- கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும்.
- சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்க விடவும். தேவைக்கேற்ப உப்புப் போடவும். சற்று புளி வாசனை போனதும் தேவையானால் சிறிய கட்டி வெல்லமும் சேர்க்கலாம்.
- பிறகு அரைத்துப் பொடி செய்து வைத்துள்ள பொடியைக் கொட்டி இறக்கவும். பொல பொலவென்று சாதம் வடித்து, ஆறவிட்டு கிளறி மூடி வைக்கவும்.
Nutrition
Serving: 100g | Calories: 49kcal | Carbohydrates: 6g | Protein: 4.4g | Fat: 0.9g | Fiber: 1.1g | Calcium: 395mg | Iron: 1.93mg