- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, LUNCH
சாம்பார் குழம்பு தான் தமிழ்நாட்டின் முக்கிய உணவு. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். அந்த வகையில் சற்று வித்தியாசமாக கீரை சாம்பார் செய்யலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கீரை. வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான வெந்தயக் கீரை சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!!
கீரையை பொரியல், கூட்டு, கடையல், சாம்பார் என்று பலவாறு நாம் நமது உணவில் சேர்க்கலாம். அதில் கீரை சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இம்மாதிரியான கீரை சாம்பார் அடிக்கடி செய்வது குழந்தைகளுக்கு நல்லது. கீரை பொரியல், மசியல் பிடிக்காதவர்கள் கூட வீட்டில் கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸியில் தேங்காய் சீரகம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் குக்கரில் 20நிமிடங்கள் ஊற வைத்த துவரம் பருப்புடன் தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு எடுக்கவும்.
பின் வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அது வதங்கியதும் பொடிதாக நறுக்கி வைத்த கீரை சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு சேர்த்து 5நிமிடங்கள் வதக்கினால் போதும் கீரை வதங்கி விடும்.
பின் புளி கரைசல் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும். அதனுடன், சாம்பார் பொடியை தண்ணீரில் கரைத்து புளிக் கரைசலுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் வேக வைத்த துவரம் பருப்பு மசித்து,தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கொதிக்க விடவும்.
இதில் தேங்காய் சீரகம் அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
அவ்வளவுதான். சுவையான கீரை சாம்பார் ரெடி. இதில், சிறு கீரைக்கு பதில், அரைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் கீரை என எதுவென்றாலும் சேர்க்கலாம்.





