Advertisement
ஸ்நாக்ஸ்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் புடலங்காய் கட்லெட் இப்படி ஒரு முறை வீட்டிலயே ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், வெஜிடபிள் கட்லெட் மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை.

இதனையும் படியுங்கள் : ருசியான கீரை கட்லெட் இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெடி!!!

Advertisement

வெஜிடபிள் கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த புடலங்காய் கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

புடலங்காய் கட்லெட் | Snake Gourd Cutlet

Print Recipe
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், வெஜிடபிள் கட்லெட் மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. வெஜிடபிள் கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும்.
Course snacks
Cuisine Indian
Keyword Cutlet
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Advertisement
Servings 4 People
Calories 115

Equipment

  • 1 குக்கர்
  • 1 கரண்டி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 2 சின்ன புடலங்காய்
  • 1/2 கப் பட்டாணி
  • 1 பெரிய
  • 1/2 கப் ப்ரெட் தூள்
  • 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம்
  • 1/4 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டேபிள் எண்ணெய்

கோட் செய்ய

  • 1/4 கப் மைதா
  • 1/2 கப் ப்ரெட் தூள்
  • 1/4 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானஅளவு

Instructions

  • புடலங்காய்
    Advertisement
    மற்றும் ஊற வைத்த பட்டாணியை குக்கரில் 4விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் வதக்கிக் கொள்ளவும்.
  • பின் நறுக்கிய மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் இதில் வேக வைத்த புடலங்காயை மசித்து அதனுடன் பட்டணியும் சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவவும்.
  • இந்த கலவை ஆறியதும் இதனுடன் 1/2கப் அளவு ப்ரெட் க்ரம்ப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின்‌ அவற்றை தேவையான வடிவத்திற்கு மாற்றவும்.
  • பின்னர் ஒரு பௌலில் மைதமாவு, மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
  • பின் ஒவ்வொரு துண்டுகளையும் முதலில் கரைத்த மாவில் முக்கி பின் ப்ரெட் க்ரம்ஸ்-ல் புரட்டி தட்டில் வைக்கவும்.
  • பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் ஒவ்வொரு துண்டுகளாக சேர்த்து 2புறங்களிலும் சிவக்க பொரிக்கவும்.
  • அவ்வளவுதான். சுவையான புடலங்காய் கட்லெட் ரெடி. டீ, காபியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 700g | Calories: 115kcal | Carbohydrates: 6g | Protein: 7g | Fat: 5.1g | Saturated Fat: 0.6g | Sodium: 57mg | Potassium: 5mg | Fiber: 2.3g | Sugar: 1.13g | Vitamin A: 122IU | Calcium: 4mg

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

43 நிமிடங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

10 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

12 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago