Advertisement
ஆன்மிகம்

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிப்பெயர வேகமாம முருகப்பெருமனை மட்டும் இப்படி வழிபடுங்கள் போதும்!

Advertisement

எவ்வளவு தான் சொத்து, பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது.

சொந்த வீடு கனவு நிறைய வேற என்பதற்காக எத்தனையோ கோவிலுக்கு சென்று, எத்தனையோ பூஜை வழிபாடு என செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்பவர்கள் வீட்டிலேயே இப்படி முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்தால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

Advertisement

சொந்த வீடு வாங்க

கிரகங்களில் செவ்வாய் பூமி காரகன் என அழைக்கப்படுகிறார். செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். அதனால் தான் எந்த ராசியினராக இருந்தாலும் முருகனை வழிபட்டால் செவ்வாய் பகவானின் அருள் கிடைத்து வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். செவ்வாய்க்கிழமையில் முருகனை பூஜித்து வர அந்த தடை நீங்கி விரைவில் சொந்த வீடு‌ வாங்கலாம்.

இந்த வழிபாடு மிகவும் எளிமையானது தான். இந்த

Advertisement
வழிபாட்டை செவ்வாய் கிழமை காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் முடிக்க வேண்டும். ஏனென்றால் அந்த நேரம் செவ்வாய் ஹோரை, இந்த நேரத்தில் நாம் முருகனை வழிபடும் பொழுது அதற்கான பலன் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கும். இந்த வழிபாட்டை நீங்கள் முருகன் கோவிலில் தான் செய்ய
Advertisement
வேண்டும். அதனால் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். அதன் பிறகு அந்த தீபத்தின் முன்னரே அமைந்து கந்த சஷ்டி கவசத்தை ஒரு முறையாவது முழுமையாக மனதிற்குள்ளேயே படிக்க வேண்டும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும். ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் இந்த வழிபாட்டை வீட்டிலேயே மேற்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்குமாறு விளக்கை ஏறிய விடுங்கள்.

இதனையும் படியுங்கள் : பெற்றோர் சொல்வதை கேட்டு குழந்தைகள் வளர! கற்றாழை விளக்கு பரிகாரம்!

முருகபகவானை செவ்வாய்க்கிழமையில் தரிசிப்பதும், வணங்குவதும் பலவிதமான நன்மைகளைத் தரும். செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய் பகவானையும் முருகக் கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு, பிரார்த்தனை செய்து வந்தால், சொந்த வீடு மனை வாங்கும் யோகம் அமைத்துக் கொடுப்பார்.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

2 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

2 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

4 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

7 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

7 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

7 மணி நேரங்கள் ago